Site icon Tamil News

உலக மகளிர் தின விழா பத்திரிக்கை துறை நடிகை பங்கேற்பு

சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உலக மகளிர் தின விழா மிஸ்சஸ் சேர்மன் ரேவதிசாய்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்து தமிழ் பத்திரிக்கையின் தணிக்கையாளர் பிருந்தாசீனிவாசன், நடிகை அபிநட்சத்திரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மகளிர் தின விழாவில் இந்து தமிழ் பத்திரிக்கையின் தணிக்கையாளர் பிருந்தாசீனிவாசன் பேசுகையில்

பெண்கள் ஆண்களுக்கு எதிரானவர் அல்ல எனவே அண்களோடு சேர்ந்து நம் நமது உரிமைகளை பெற போராட வேண்டும்

நாம்  காலம் காலமாக போராடி போரடிதான் இன்று நாம் அனுபவித்து வரும் உரிமைகளை பெற்று இருக்கிறோம்

அறிவுதான் பெண்களுக்கு நிரந்தர அணிகலன் அழகு அல்ல எனவும் பெண்களுக்கு அறிவு அடக்கத்தையும்,  பணிவையும் கொடுக்கும் எனவும் அனுபவமும், அறிவும் வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்றும்

ஒரு வயதிற்கு மேல் அப்பாவையோ, அம்மாவையோ சான்று இருக்க கூடாது, எனவும் போராடி, போராடிதான் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும், படித்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டும் எனவும், பெண்களுக்கு பிரசவம் மட்டுமே ஒரு அதிகபடியான வலி அதையே தாங்க கூடிய அளவுக்கு வலிமையானவள் பெண்கள், உங்களது திறமைகளை நீங்கள்தான் வெளிகொண்டு வரவேண்டும்

நாம் போராடி வந்த அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும், உலகம் மிக பெரியது, அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும் என அனைவருக்கும் உழைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் கூறினார்.

இதில் சித்தா முதல்வர், முனைவ மதுகுமார், ஹோமியோபதி  முதல்வர், முனைவர் சேரமன்னன், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வர், முனைவர் பொற்குமரன், தொழில்நுட்ப கல்லூரி முதல்வர், முனைவர் கே.பழனிகுமார் மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version