இலங்கை

உலகின் சிறந்த இடங்களில் ஒன்றான இலங்கை – Forbes சஞ்சிகை தகவல்

வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கையை Forbes சஞ்சிகை தரப்படுத்தியுள்ளது.

ஆபிரிக்காவிற்கு  வெளியில் இலங்கை இந்த இடத்தை பிடித்துள்ளது.

உலக நாடுகளில்  சிறுத்தைகளின் அடர்த்தியான பரம்பலைக் கொண்ட இடமாகவும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை விடவும்  மிகச்சிறந்த பூனை இனங்களைக் கொண்ட இடமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக  Forbes குறிப்பிட்டுள்ளது.

ஆசிய யானைகள், மயில்கள், நீர் எருமைகள், குரங்குகள் மற்றும்  தேன் உண்ணி கரடிகளை அதிகம் கொண்ட தேசமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cape Cod-இல் இருந்து டொமினிக்கன் குடியரசு  வரை திமிங்கலங்களை பார்க்கக்கூடியதாக இருந்தாலும்,  இலங்கையில் மாத்திரமே எளிதில் நீலத் திமிங்கலங்களை காண முடியும் எனவும்   Forbes விளம்பியுள்ளது.

இவ்வாண்டின் ஆரம்பம் முதலே இலங்கை தனது தனித்துவமான சுற்றுலா சலுகைகள் மற்றும் இயற்கை அழகு காரணமாக தொடர்ந்து பலரதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

முன்னதாக, Big 7 Travel சமூக ஊடகத் தரவுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் பதிவுகளை செய்யக்கூடிய 50 இடங்களின் பட்டியலில் இலங்கை ஒன்பதாவது இடத்தில் இருந்தது.

அத்துடன், Travel Triangle வௌியிட்ட, 2023 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்ய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்தது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content