Site icon Tamil News

இலங்கை – ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இடையிலான கொன்சியூலர் விவகாரங்கள் தொடர்பான குழுவின் முதலாவது கூட்டம்

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான கொன்சியூலர் விவகாரங்கள் தொடர்பான குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இருதரப்புப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரத்துகளுக்கு அமைவாகவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சுக்களின் உயர்மட்ட இராஜதந்திரிகளை உள்ளடக்கிய பிரதிநிதிகள் குழு பங்கேற்றிருந்தது.

இக்கூட்டத்தில் ஆட்கடத்தல், சட்டவிரோத குடியேற்றம், தமது நாட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மற்றைய நாட்டுப்பிரஜையை நாடுகடத்துதல் மற்றும் இழப்பீடு வழங்குதல் என்பன உள்ளடங்கலாக கொன்சியூலர் சேவையுடன் தொடர்புடைய, இருநாடுகளினதும் பொதுவான அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version