Site icon Tamil News

இலங்கையில் வலுவடையும் ரூபாவின் பெறுமதி!! அமைச்சர் வெளியிட்ட தகவல்

கடந்த காலங்களில் அரசாங்கம் மேற்கொண்ட  நடவடிக்கைகளினால் ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், ஜனவரி மாதத்தில் மட்டும் 437 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுப் பணமாகப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

சுற்றுலாத்துறையின் அண்மைக்கால வளர்ச்சியும் ரூபாயின் மதிப்பு வலுவடைய ஒரு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனவரி முதல் பிப்ரவரி வரை, இந்த நாட்டில் அதிகாரப்பூர்வ கையிருப்பு அளவு 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிவித்துரு ஹெல உறுமிய பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, கடன் நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தில் கடன் வாங்குவது தீர்வாகாது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, “இலங்கை மத்திய வங்கி சட்டமூலம்” நிறைவேற்றப்பட்டால் அதன் கட்டுப்பாட்டை அரசாங்கத்திடம் இருந்து இழக்க நேரிடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றிருந்தால், விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குமாறு இலங்கை தேசிய கட்டுமான சங்கம் இன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version