Site icon Tamil News

இலங்கையில் மனித பாவைனைக்கு உதவாத சாக்லேட்டுகள் மீட்பு

இலங்கையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, ஹலவத்த நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மனித பாவனைக்கு தகுதியற்ற சாக்லேட் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹலவத்த  நகரில் உள்ள 3 கடைகளில் மனிதர்கள் சாப்பிடுவதற்குத் தகுதியற்ற சாக்லேட் கையிருப்பு இருப்பதைக் கண்டுபிடித்ததாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர், ஹலவத்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடைகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் இனிப்புகள் மற்றும் சாக்லேட்டுகள், காலாவதி, உற்பத்தி தேதி போன்ற முக்கிய தகவல்களை குறிப்பிடாமல் நாடளாவிய ரீதியில் உள்ள சில கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, மனித பாவனைக்கு தகுதியற்ற சாக்லேட் விற்பனை செய்யும் இடங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கையை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அண்மையில் ஆரம்பித்துள்ளது. அதன் கீழ் ஹலவத்த பகுதியில் முதல் சோதனை நடத்தப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரமற்ற சாக்லேட்டுகள் மற்றும் இனிப்பு வகைகளை நாடளாவிய ரீதியில் விற்பனை செய்யும் இடங்களில் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version