Site icon Tamil News

இலங்கையில் டொலரைக் கொடுத்து ரூபாவைப் பெற்றுக்கொள்ளும் மக்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகின்றது.

இதனால், கொழும்பு பிரதான நாணயமாற்று நிலையங்களில், டொலரைக் கொடுத்து, ரூபாவைப் பெற்றுக்கொள்ள வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அவதானிக்க முடிகிறது.

எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் நாணயமாற்று விகிதத்தின்படி, நேற்றைய தினம், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனை பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 307.36 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 325.52 ரூபாவாகவும் இருந்தது.

இந்த நிலையில், இன்றைய தினம், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனைப் பெறுமதி, 328 ரூபா 90 சதமாக பதிவாகி உள்ளதென மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி, 311 ரூபா 62 சதமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, ரூபாவின் மதிப்பேற்றத்தின் பயன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் இன்று வலியுறுத்தியது.

சபையில் இன்று முற்பகல் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

 

Exit mobile version