Site icon Tamil News

இலங்கையில் சீரற்ற காலநிலை -பாரிய மண்சரிவில் வீடுகளை இழந்த மக்கள்

மீரியபெத்தையை போன்று பூனாகலை கபரகலை தோட்டத்தில் பாரிய மண்சரிவொன்று இரவு ஏற்பட்டுள்ளது.

நேற்று ஏற்பட்ட மணிசரிவில் அந்தப் பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உரிய அதிகாரிகளுடன் இணைந்து பிரதேச மக்கள் மற்றும் ஹல்துமுல்ல பிரதேச சபை தலைவர் அசோக்குமார் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தற்காலிகமாக பாதுகாப்பான முறையில் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உடனடியாக இங்கு மீட்பு பணிகளை முன்னெடுக்கவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கவும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தலைவருடன் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பூனாகலை கபரகல தோட்ட முகாமையாளரை தொடர்பு கொண்ட செந்தில் தொண்டமான், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 24 மணித்தியாலயத்திற்குள் மாற்று  இடங்களை  வழங்காவிடின், தோட்ட தொழிலாளர்களை வைத்து, பாதிக்கப்பட்ட மக்கள் தோட்ட முகாமையாளரின் இல்லத்தில் தங்கவைக்கப்படுவார்கள் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

 

Exit mobile version