இரத்தினபுரியிலிருந்து பாணந்துறை நோக்கி புறப்பட்ட பேருந்தில் தீ விபத்து!
ஹொரணை – இரத்தினபுரி வீதியில் பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்துக்கு முன்பாக தனியார் பஸ் ஒன்று இன்று (21) தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரத்தினபுரியிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு தீவிபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த பேருந்தில் 40 பயணிகள் இருந்துள்ளனர். அதிஸ்டவசமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஹொரணை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் கண்டறிப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 8 times, 1 visits today)