இமயமலையில் உருகும் பனிப்பாறைகள்!
இமயமலைப் பகுதியில் உள்ள பெரும்பாலான பனிப்பாறைகள் உருகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பாறைகள்ஃஏரிகள் மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றைக் கண்காணிப்பது தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு இயற்கை பேரழிவுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் இமயமலை ஆற்றின் ஓட்டத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இமயமலைப் பனிப்பாறைகளில் பெரும்பாலானவை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விகிதங்களில் உருகுவதோடு அதன் இடத்தில் இருந்து பின்வாங்கி வருகின்றன என்று அறிக்கை கூறுகிறது.
பனிப்பாறைகள் நதி அமைப்பை பாதிக்கும் மற்றும் பனிப்பாறை ஏரிகளின் வெடிப்பு, பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் தூண்டப்படும் வெள்ளம் போன்ற பேரழிவுகளுக்கு வழிவகுக்கும் என்று அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மலைவாழ் மக்கள் மற்றும் மலையடிவார மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்க கூடும். அத்துடன் பனிப்பாறை தொடர்பான தரவுகளுக்கு அண்டை நாடுகளுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.