அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இரு பங்களாதேஷ் பிரஜைகள் கட்டுநாயக்கவில் கைது!
போலி விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL -226 இல் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பின்னர் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான தமது ஆவணங்களை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள பீடத்தில் ஷ வழங்கியுள்ளனர். இதன்போது அவர்களின் கடவுச்சீட்டில் பயன்படுத்தப்பட்ட விசாக்கள் சட்டவிரோதமான முறையில் அகற்றப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்தே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.