செய்தி தமிழ்நாடு

அர்ஜுனா விருது பெற்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா

மதுரை லேடி டோக் கல்லூரி மாணவி ஜெர்லின் அனிகா மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் விளையாடி தங்கம் உள்ளிட்ட 3 பதக்கம் பெற்றார். இந்திய அரசு வீராங்கனைக்கு  அர்ஜுனா விருது  வழங்கி கெளவுரவித்தது.

மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா மற்றும் தேசிய மற்றும் உலக அளவில் விளையாடுப்  போட்டியில்  சாதித்த மாணவிகளுக்கான பாராட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றினார்.

அனைவரும் பொறாமைப்படும் அளவிற்கு எனக்கு வரவேற்பு கொடுத்து உள்ளீர்கள் இதை எனக்கான வரவேற்பாக நான் பார்க்கவில்லை விளையாட்டுப் போட்டியில் சாதனை புரிந்த வீராங்கனைகளுக்காக நீங்கள் அளித்த வரவேற்பாக நான் பார்க்கிறேன்.

விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து எங்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றாலும் நான்தான் அங்கே சிறப்பு விருந்தினர். எல்லாவற்றிற்கும் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தி வருகிறேன்.

ஜெர்லின் அனிகா எக்னாமிக்ஸ் படித்தவரே விளையாட்டிலும் சாதித்து இருக்கிறார்கள் மிகப்பெரிய சாதனை.  வீரர் வீராங்கனைகளை தயார் செய்வதற்கு பயிற்சியாளர்கள் மிக முக்கியம்.

எங்களுடைய ஆசிரியர்கள் பேரறிஞர் அண்ணா, பெரியார்,கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின்.

நிதி அமைச்சர் பி.டி.ஆர் பேசும் பொழுது நாங்கள் வரும்பொழுது ஒரு பேராசிரியர் வருவதைப் போல பாவித்து உற்சாகமின்றி இருப்பதாக கூறினார்.

ஆம் அவர் பேராசிரியர் தான் டி.வி நிகழ்ச்சிகளில் எதிரில் பேசுபவருக்கு கூட பாடம் எடுக்க கூடிய அளவுக்கு பேராசிரியராக உள்ளார்.

மேலும் சட்டமன்றத்தில் அவர் எழுந்து பேசத் தொடங்கினால் சட்டமன்றமே அமைதியாகும் அந்த அளவுக்கு அவர் எல்லோருக்கும் கிளாஸ் எடுப்பார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் சாதித்த வீராங்கனை ஜெரில் அனிகாவிற்கு கடந்த ஒரு வருடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் 79.5 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறையை ஊக்கப்படுத்தும் நோக்கில் தற்பொழுது முதல்வர் கோப்பை  காண போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 25 கோடி திட்டத்தில் அறிவிக்கப்பட்டு தற்போது 15 விதமான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

வரும் ஜூன் மாதம்  சென்னையில்  உலகக் கோப்பை ஷ்குவாஸ் போட்டி நடைபெற உள்ளது. அதில் 8 நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.

அதேபோல் ஏசியன் ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. தொடர்ச்சியாக விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ளது .

கிரிக்கெட், கால்பந்து ஆட்டத்தை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க விருப்பப்படுகிறோம். அதுவே நம் குடும்பத்தில் இருந்து ஒருவர் விளையாட சென்றால் பெற்றோர் பயப்படுகிறோம் விளையாட்டில் ஈடுபட்டால் வேலைவாய்ப்பு பொருளாதார சிக்கல் வருமோ என்று வீரர்கள் வெளியில் வரவேண்டும் விளையாட்டும் முக்கியம்.

இந்த அரசு கல்வி, விளையாட்டு, மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தொடர்ந்து ஜெர்லின் அனிகா, ரோஸி மீனா , ரேவதிவை பாராட்டி விளையாட்டு துறை அமைச்சர் நினைவு பரிசு மற்றும்

செர்லின் அனிகாவிற்கு  கல்லூரி சார்பாக வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் காண காசோலையை வழங்கினார். அதேபோல் ஜெர்லின் அனிகாவின் பயிற்சியாளர் சரவணனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.

 

(Visited 2 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content