அமெரிக்க துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு
அமெரிக்காவில் 11 கருப்பினத்தவர்களை சுட்டுக்கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே 14 அன்று, 18 வயதுடைய பெய்டன் ஜென்ட்ரான் என்ற நபர், முடிந்தவரை அதிகமான கறுப்பின மக்களைக் கொல்லும் நோக்கத்துடன், 200 மைல்களுக்கு (322 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள தனது சொந்த ஊரான கான்க்ளினில் இருந்து காரில் சென்றார்.
பஃபேலோவில் உள்ள டாப்ஸ் ஃப்ரெண்ட்லி மார்க்கெட்டை குறிவைத்து பல மாதங்களாக ஜென்ட்ரான் தாக்குதலைத் திட்டமிட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
தன்மீதான குற்றச்சாட்டுக்களை பெய்டன் ஜென்ட்ரான் ஏற்றுக்கொண்டதையடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)