Site icon Tamil News

அமெரிக்கா இலங்கைக்கு மூன்று தொன் ஊட்டச்சத்து மருந்துகளை அனுப்பியுள்ளது

அமெரிக்காவின் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட நிவாரணம் மற்றும் அபிவிருத்தி அமைப்பு, இலங்கை முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மூன்று தொன்  ஊட்டச்சத்து மருந்துகளை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வோசிங்டன் டி.சியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கு இணங்க இந்த மனிதாபிமான உதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டரில்  பதிவிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், அமெரிக்காவின் இவ்வாறான அற்புதமான செயற்பாட்டை பாராட்டியுள்ளதுடன்,

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள  சவாலான நேரத்தில் அமெரிக்க மக்கள் எப்படி இலங்கைக்கு தமது ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் வழங்குகின்றார்கள் என்பதற்கு மற்றொரு சிறந்த உதாரணம் இதுவாகும் எனவும் கூறியுள்ளார்.

Exit mobile version