அமெரிக்காவில் ஏரியில் மிதந்த இந்திய மென்பொறியிலாளரின் சடலம்
ஏப்ரல் 9 ஆம் திகதி காணாமல் போன 30 வயதான இந்திய-அமெரிக்க மென்பொறியிலாளரின் சடலம் அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள ஏரியில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சர்ச்சில் ஏரியில் ஒரு சடலம் தண்ணீரில் காணப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து, அப்பகுதிக்கு அழைக்கப்பட்ட அதிகாரிகளால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அறிக்கை செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
அங்கித் பாகாய் என்பவர் கடைசியாக ஏப்ரல் 9 ஆம் தினதி காலை 11.30 மணியளவில் மைல்ஸ்டோன் பிளாசாவுக்கு அருகிலுள்ள ஒரு சிகிச்சை மையத்திலிருந்து வெளியேறியபோது காணப்பட்டார்.
அதன் பிறகு அவரது குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஒரு தேடுதல் குழுவை வழிநடத்தினர். அன்கித் பாகாயின் குடும்பத்தினர் உள்ளூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
அவர் கடைசியாகப் பார்த்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு ஷாப்பிங் சென்டர் உட்பட பல இடங்களுக்குச் சென்று அவரது படத்தை ஒவ்வொரு சில அடிகளிலும் பதிவிட்டு அவரை தேடினர்.
பாகாய் காணாமல் போன நாளில், சர்ச்சில் ஏரியில் ஒரு நபரின் சடலம் இருப்பதாக வந்த புகாருக்கு பொலிசார் பதிலளித்தனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. எவ்வாறாயினும், மரணம் தொடர்பில் சந்தேகிக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.