ரஷ்யா, சீனாவின் மடியில் விழக் கூடாது – விவேக் ராமசாமி!
ரஷ்யா, சீனாவுடனான இராணுவ உறவுகளை முறித்துக்கொண்டால் மாத்திரமே பெய்ஜிங்கை எதிர்கொள்ள முடியும் என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான தற்போதைய கட்டுப்பாட்டுக் கோடுகளை முடக்குவதற்கு முன்வருவதாகவும், நேட்டோ உக்ரைனை அதனுள் அனுமதிக்காது, பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு கடினமான உறுதிமொழியை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பதிலுக்கு, சீனாவுடனான தனது இராணுவக் கூட்டணியிலிருந்து ரஷ்யா வெளியேற வேண்டும், என்றார்.
அத்துடன் பெய்ஜிங்கை எதிர்கொள்ள வேண்டும் என்றால், ரஷ்யா சீனாவின் மடியில் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 7 times, 1 visits today)