பாகிஸ்தானின் பலுசிஸ்தான் நாய்கடியால் பலரும் பாதிப்பு
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் குவெட்டா நகரில் நாய்க்கடி அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் ரேபிஸுக்கு எதிரான உயிர்காக்கும் தடுப்பூசிகள் குவெட்டாவில் உள்ள சாண்டேமன் மாகாண மருத்துவமனையில் இல்லை என்று கூறப்படுகிறது.
ஊடக அறிக்கைகளின்படி, குவெட்டாவில் உள்ள சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள், குறிப்பாக சாண்டேமானில் உள்ள மாகாண மருத்துவமனை, உயிர்காக்கும் ரேபிஸ் தடுப்பூசிகளின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், நவா கிள்ளி, போஷா முண்டி, புஷ்துனாபாத், சரியாப் ரோடு உள்ளிட்ட குவெட்டாவின் பல்வேறு பகுதிகளில் நாய்களால் கடித்த 40க்கும் மேற்பட்டோர் கடந்த 4 நாட்களில் சண்டேமன் மாகாண மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் நோய்த்தடுப்பு ஊசிகள் இன்மையால் நோயாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகளை மேற்கோள்காட்டி, வெறிநோய்க்கான தடுப்பூசியை வழங்குமாறு பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், வெறிநாய்க்கடிக்கு எதிரான உயிர்காக்கும் தடுப்பூசிகள் கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் அந்த ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
குவெட்டா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெறிநாய்க்கடியின் தாக்கம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தெருநாய்களை அகற்றுவதற்கான பிரச்சாரத்தை பலூசிஸ்தான் உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் கோரியுள்ளனர் குவெட்டா குடிமக்கள்.