அறிவியல் & தொழில்நுட்பம்

பண நெருக்கடியில் OpenAI! கடும் நெருக்கடியில் ChatGPT

ChatGPT AI தொழில்நுட்பத்தை உருவாக்கிய OpenAI நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 7 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு சாம் அல்ட்மேன் என்பவரால் OpenAI என்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆதரவால் மேம்படுத்தப்பட்ட இந்த நிறுவனம், கடந்த நவம்பர் 2022-ல் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வெளியிட்டதன் மூலம் உலகெங்கிலும் பேசுபொருளாக மாறியது.

சொல்லப்போனால் மிகக்குறுகிய காலத்தில் இந்நிறுவனம் பிரபலம் அடைந்து, சாதாரண மொபைல்போன் பயனர்கள் முதல் மிகப்பெரிய தொழிலதிபர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. AI தொழில்நுட்பம் பல காலமாகவே இருந்து வந்தாலும், ChatGPT புதிய அடையாளமாக திகழ்ந்தது. இது வெளிவந்த பிறகுதான் செயற்கை நுண்ணறிவு குறித்த பல விவாதங்கள் தொடங்கப்பட்டன.

எவ்வித கட்டணமும் இன்றி நாம் எந்த கேள்வி கேட்டாலும் மனிதர்களைப் போலவே சிறப்பான பதில்களைத் தருகிறது ChatGPT. இதனால் மனிதர்களின் அன்றாட வாழ்வில் பல விஷயங்கள் மேலும் எளிதாகிவிட்டது எனலாம். இதனாலையே லாப நோக்கற்ற நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு மைக்ரோசாப்ட் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து 10 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடு கிடைத்த போதிலும், இது தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை 540 மில்லியன் டாலர்கள் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தான் இலவச பயனர்கள் இந்த சேவையை சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான பராமரிப்பு செலவுகள் மட்டுமே, ஒரு நாளைக்கு 7 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. இது பொருளாதார அடிப்படையில் OpenAI நிறுவனத்திற்கு பெரும் நஷ்டமாகும். இது மட்டுமின்றி சிறந்த மேம்பட்ட மாடல்களை உருவாக்குவதற்கான கிராபிக்ஸ் கார்டுகளின் பற்றாக்குறையால், இந்நிறுவனத்திற்கு சிக்கல் மேலும் அதிகமாகியுள்ளது.

இந்நிறுவனத்திற்கான வளங்களின் பற்றாக்குறையானது, புதிய அப்டேட்டுகளை மேம்படுத்துவது, அவற்றை செயல்படுத்துவதற்கான நிறுவனத்தின் செயல்களை முற்றிலுமாக குறைக்கிறது. இது இனிவரும் காலங்களில் ChatGPT-ன் தரத்தை பாதிக்கும் எனச் சொல்லப்படுகிறது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்