அயர்லாந்தில் € 1.4 மில்லியன் தங்க கட்டிகள் மற்றும் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

€1.4m தங்கக் கட்டிகள், €460,000 பணம் மற்றும் €210,000 மதிப்புள்ள கோகோயின் அயர்லாந்து குடியரசில் இரண்டு நாள் தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு கைப்பற்றப்பட்டுள்ளன.
50 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று ஐரிஷ் பொலிசார் தெரிவித்துள்ளார்.
டப்ளின் பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சோதனைகள் நடந்தன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
(Visited 19 times, 1 visits today)