ஜப்பானின் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு, மேற்கு வட்டாரங்களிலும் கடற்கரையை ஒட்டிய மலைப்பகுதிகளிலும் இவ்வாறு பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆண்டிறுதிப் பயண காலமாக இருப்பதால் போக்குவரத்து இடையூறுகள் குறித்து கவனமாக இருக்குமாறு மக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பனிப்பொழிவு நிகாத்தா வட்டாரத்தில் 80 சென்டிமீட்டர் வரை பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மின் வடங்கள், மரங்கள் ஆகியவை பனியால் போர்த்தப்பட்டிருக்கும், பனிச்சரிவு குறித்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறைக் காலத்தில் பயணங்களைத் திட்டமிடுவோர் பாதைகளையும் பயண நேரங்களையும் மாற்றுவது குறித்து யோசிக்குமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
(Visited 4 times, 4 visits today)