இலங்கையில் 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஒன்பது (09) மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகளை புதுப்பித்துள்ளது.
இதன்படி NBRO) பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இந்தப் பகுதிகளில் பதிவாகியுள்ளதால், மண்சரிவு, பாறை சரிவு மற்றும் நிலம் சரிவு போன்ற அபாயங்களைத் தவிர்ப்பதற்காக மக்கள் அவதானமாக இருக்குமாறும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
NBRO பதுளை, கொழும்பு, கம்பஹா, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இப்பகுதிகளில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு கோரியுள்ளது.
(Visited 8 times, 1 visits today)