ஜெர்மனியில் உதவி பணம் பெறும் மக்களுக்கு வெளியான தகவல்
ஜெர்மனியில் சமூக உதவி பணம் பெற்று வருகின்றவர்களுக்காக அரசாங்கம் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, இனிமேல் சமூக உதவி பணம் பெறுகின்றவர்கள் வேலைக்கு சென்றால் விசேட நிதி உதவியை வழங்கப்படும் திட்டமிடப்பட்டுள்ளது.
உதவி பணம் பெற்றால் இந்த விசேட நிதி உதவியை பெறுவதற்கு கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டியது அவசியமாகும்.
ஜெர்மனியின் தொழில் அமைச்சர் வுபேட்டஸ் ஹைல் சமூக உதவி பணம் பெறுகின்றவர்களை வேலைக்கு செல்வதற்கு ஊக்குவிப்பதற்காக பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.
சமூக உதவியை பெறுகின்றவர்களை வேலைக்கு செல்லுமாறு பணித்து, அவர்கள் வேலைக்கு செல்லாது விட்டால் அவரது சமூக உதவி பணத்தில் இருந்து 30 சதவீதமான பணத்தை இல்லாது செய்வது என்பதே சமூக உதவி திணைக்களத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.