போர்த்துக்களில் இடம்பெற்ற கோர விபத்து – ஜெர்மனியர் உள்பட இரு சுவிஸ் நாட்டவர் பலி!

போர்ச்சுகல் தலைநகரில் கேபிள் கார் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 16 பேர் இறந்ததாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பலர் வெளிநாட்டினர் என தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஒரு அமெரிக்கர், ஒரு ஜெர்மன், ஒரு உக்ரேனியர் மற்றும் இரண்டு கனடியர்கள் அடங்குவர் என்று போலீசார் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.
மேலும் ஐந்து போர்த்துகீசியர்கள், இரண்டு கொரியர்கள் மற்றும் ஒரு சுவிஸ் நாட்டவர் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள மூன்று பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி கூறினார்.
மின்சார ஸ்ட்ரீட் காரில் உள்ள பாதுகாப்பு கேபிள் உடைந்ததால் கார் தடம் புரண்டதாகத் தெரிகிறது என்று லிஸ்பனின் தகவல் தொடர்புத் துறை முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.