DeepSeek செயலியை தடைசெய்யும் உலக நாடுகள் : விளக்கமளித்துள்ள சீனா!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/china-3.jpg)
அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் AI செயலியான DeepSeek-ஐ தடை செய்யும் முடிவுக்கு சீனா பதிலளித்துள்ளது, இந்த செயலியைப் பயன்படுத்துவது ஆபத்தானது என்று கூறியுள்ளது.
சீன அரசாங்கம் தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து அதன் சட்டப்பூர்வத்தன்மையை உறுதி செய்யும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் நேற்று (6) ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சீன அரசாங்கம் எந்த வகையிலும் சட்டவிரோதமாக தரவுகளைச் சேகரிக்கவோ அல்லது சேமிக்கவோ இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமோ அல்லது தனிநபர்களிடமோ எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்று குவோ ஜியாகுன் சுட்டிக்காட்டினார்.
தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகளை அரசியலாக்குவதை சீனா எப்போதும் எதிர்க்கிறது என்றும் அவர் கூறினார்.
சீன நிறுவனங்களின் சட்டபூர்வமான உரிமைகளை சீனா உறுதியாகப் பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.