இலங்கை – பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கு சிறப்பு குழு நியமனம்!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது. மே மாத தொடக்கத்தில் பொதுமக்களின் கருத்தையும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்களையும் பெற நடவடிக்கை எடுக்கவும், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகங்களின் கருத்துக்களையும் பெறவும் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார […]