இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ கைது

  • January 25, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை பெலியத்த பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். கைது தொடர்பான கூடுதல் தகவல்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பரவி வரும் புதிய காட்டுத்தீ – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

  • January 25, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் பரவி வரும் புதிய காட்டுத்தீ, ஆபத்தான பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றுவதை துரிதப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் ஏற்பட்ட ஹியூஸ் எனப்படும் புதிய காட்டுத் தீயால் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவு ஏற்கனவே முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்கு காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளது. பலத்த காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்துவது கடினம் என்று தீயணைப்பு வீரர்கள் கூறுகின்றனர். இருப்பினும், தீ நிலைமையில் சுமார் […]

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

  • January 25, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. இன்றைய தினம் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.66 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.50 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 4.02 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரும் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப் அதிரடி

  • January 25, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். புலம் பெயர்ந்தோரை ராணுவ விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்து அது தொடர்பான படங்களை வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், உலகம் முழுவதற்கும் அதிபர் டிரம்ப் கடுமையான- தெளிவான செய்தியை தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் முக சுருக்கங்களை நீக்க முயற்சித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • January 25, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் முக சுருக்கங்களை நீக்க ஊசியில் பெற்ற சிகிச்சை விஷமானதால் சிட்னி பெண் ஒருவர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தச் செய்தியுடன், சிட்னி சுகாதார பிரிவு இந்த தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு எச்சரிக்கைகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சுருக்கங்களை நீக்கப் பயன்படுத்தப்படும் ஊசிகள் விஷமாகியதால் பொது சுகாதார அதிகாரிகள் இதுபோன்ற விடயங்களைத் தவிர்க்குமாறு பெண்களுக்கு அறிவுறுத்துகின்றனர். சம்பந்தப்பட்ட பெண் தற்போது சிட்னி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கட்டுப்பாடற்ற அழகுசாதன […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

WhatsApp ஸ்டேட்டஸ் இனி Facebook, Instagramஇல் பகிர்வதற்கான புதிய அப்டேட்

  • January 25, 2025
  • 0 Comments

மெசேஜ், வாய்ஸ் கால், புகைப்படம் மற்றும் வீடியோ ஷேரிங் மட்டுமல்லாமல், ஸ்டேட்டஸ் வைப்பதற்காகவும் அதிகளவில் பயன்படுத்துவது வாட்ஸ்அப் மட்டும் தான். இதனால் வாட்ஸ்அப் மூலம் வைக்கப்படும் ஸ்டேட்டஸ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளிலும் பகிர புது அப்டேட் வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. இப்போது நிறுவனம் அதை WHATSAPP STATUS AUTOMATICALLY SHARE FEATURE மூலம் கொடுக்க இருப்பதை உறுதி செய்துள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளில், மெட்டா அக்கவுண்ட் சென்டர் மூலம் ஒருங்கிணைப்பு செய்து வாட்ஸ்அப் […]

விளையாட்டு

இந்தியாவுடன் 2வது டி20 இன்று – பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து அணி?

  • January 25, 2025
  • 0 Comments

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் […]

இலங்கை செய்தி

இலங்கையின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி!

  • January 25, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல இடங்களில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடும். மாலை அல்லது இரவில் மற்ற இடங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை […]

உலகம்

அமெரிக்க ஜனாதிபதி யார்? குழப்பமடைந்த Meta AI

  • January 25, 2025
  • 0 Comments

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியை அடையாளம் காணுவதில் Meta நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு அம்சம் சிக்கலைச் சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது. அதனை உடனடியாக சரி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை டொனல்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். ஆனால் நேற்றுமுன்தினம் Metaவின் AI Chatbot அம்சம் ஜனாதிபதி ஜோ பைடன்தான் அமெரிக்காவின் ஜனாதிபதி என்று கூறியது. அனைவருக்கும் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி எனத் தெரியும் என்று Meta நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார். சில நேரங்களில் AI அம்சங்கள் பழைய தகவல்களைக் […]

ஆசியா செய்தி

சீனாவில் வளர்ப்பு பூனையால் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • January 25, 2025
  • 0 Comments

சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் வளர்ப்புப் பூனையின் செயலினால் பெண் ஒருவர் தனது வேலையை இழந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சீனாவின் சோங்கிங் மாகாணத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் அவர் பணிப்புரியும் நிறுவனத்திலிருந்து தனது வேலையை இராஜினாமா செய்வதாக தனது மடிக்கணினியில் கடிதம் ஒன்று தட்டச்சு செய்து வைத்துள்ளார். ஆனால், வேலையை இழந்துவிட்டால் தான் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளை எப்படி கவனித்து கொள்வது என்ற யோசனையில் அதனை அனுப்ப வேண்டாம் […]