ஆப்பிரிக்கா

79 போராளிகளை கொன்றதாக ஒப்புதல் அளித்துள்ள நைஜீரிய இராணுவம் – மில்லியன் கணக்கான மக்கள் இடப்பெயர்வு!

  • January 25, 2025
  • 0 Comments

வடகிழக்கில் இஸ்லாமிய போராளிகளின்   கிளர்ச்சி  மற்றும் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களையும் குறிவைத்து நைஜீரிய வீரர்கள் கடந்த வாரத்தில் 79 போராளிகளையும் கடத்தல்காரர்களையும் கொன்றதாக இராணுவம்  தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் கூற்றுப்படி, வடகிழக்கு பிராந்தியத்தில் சுமார் 35,000 பொதுமக்கள் கொல்லப்பட்டு 2 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய இராணுவத்தின் நாடு தழுவிய நடவடிக்கையில் 252 நபர்கள் கைது செய்யப்பட்டு போராளிகளால் பிடிக்கப்பட்ட 67 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்று நைஜீரிய இராணுவ செய்தித் தொடர்பாளர் எட்வர்ட் பூபா ஒரு அறிக்கையில் […]

மத்திய கிழக்கு

ஜெனினில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரு பாலஸ்தீனியர்கள் பலி

  • January 25, 2025
  • 0 Comments

வெள்ளிக்கிழமை வடக்கு மேற்குக் கரையில் உள்ள ஜெனினுக்கு தெற்கே உள்ள கபாதியாவில் ஒரு வாகனத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ஜெனினின் ஆளுநர் கமால் அபு அல்-ரப், நகரின் மருத்துவ வளாகத்திற்கு அருகில் இஸ்ரேலிய ட்ரோன் வாகனத்தைத் தாக்கி, வாகனம் முழுவதுமாக எரிந்ததாகக் கூறினார். பாதிக்கப்பட்டவர்களை மஹ்மூத் கமில் மற்றும் ஹமூத் ஜகர்னே என்று அவர் அடையாளம் காட்டினார். இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தின, இது கடந்த […]

ஐரோப்பா

வளர்ப்பு நாய்களால் பாதி உண்ணப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ருமேனிய பெண்ணின் உடல்

  • January 25, 2025
  • 0 Comments

ருமேனியா நாட்டின் புக்கரெஸ்ட் பகுதியில் வசித்தவர் அட்ரியானா நீகோ(34). இவர், தனது வீட்டில் இரண்டு பக் வகை நாய்களை வளர்த்து வந்துள்ளார். தனியாக வசித்து வந்த அவரை, கடந்த சில நாள்களாக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் எந்தப் பலனும் இல்லாததால், குடும்பத்தினர் அவர் வசித்த வீட்டுக்கு விரைந்துள்ளனர். அப்போது, அவரது வீடு உள்புறமாக பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ருமேனிய காவல் துறை மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு அவரது […]

வட அமெரிக்கா

வெளிநாட்டு உதவி திட்டங்களை நிறுத்தி வைத்துள்ள அமெரிக்கா ;ரகசிய தகவல் கசிவு

  • January 25, 2025
  • 0 Comments

அமெரிக்கா தற்பொழுது நடப்பிலிருக்கும் வெளிநாட்டு உதவித் திட்டங்கள், புதிய உதவித் திட்டங்கள் ஆகியவற்றை நிறுத்திவைத்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சு அந்நாட்டின் அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதரகங்கள் ஆகியோருக்கு அனுப்பிய ரகசிய குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் கூறுகிறது. முன்னதாக, கடந்த திங்கட்கிழமை, புதிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது புதிய வெளிநாட்டுக் கொள்கைக்கு ஏற்ப, அடுத்த 90 நாள்களுக்கு அனைத்து வெளிநாட்டு உதவித் திட்டங்களையும், அவை தொடர்பான ஆய்வு முடிவுறும்வரை, நிறுத்தி வைக்கப்படுவதாக […]

ஐரோப்பா

துருக்கியின் மத்திய பகுதியில் இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டடம் – இருவரை மீட்க போராடும் குழுவினர்!

  • January 25, 2025
  • 0 Comments

துருக்கியின் மத்திய பகுதியில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மூவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இருவரையும் மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். தலைநகர் அங்காராவிலிருந்து சுமார் 260 கிலோமீட்டர் (160 மைல்) தெற்கே உள்ள கோன்யா நகரில் உள்ள நான்கு மாடி அடுக்குமாடி குடியிருபே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்க்பபடுகிறது. கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் […]

இலங்கை

இலங்கையில் உலர்ந்த திராட்சை வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • January 25, 2025
  • 0 Comments

இலங்கையில் ஒரு வாடிக்கையாளர் கடையில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொட்டலத்தில் இறந்த பல்லி இருப்பதைக் காட்டும் காணொளி வைரலாகி வருகிறது. அம்பலங்கொடையில் உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கப்பட்ட உலர்ந்த திராட்சைப் பொட்டலத்தில் இருந்தே இறந்த பல்லி இனங்காணப்பட்டுள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக உணவுகளை விற்பனை செய்யும் சில நிறுவனங்கள் சுகாதாரமற்று செயற்படுவதையும், சில நிலையங்களில் குறிப்பிட சில உணவுகள் அதி கூடிய விலையில் விற்பனை செய்யப்படுவதும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

இலங்கைப் பெண் லாஸ்லியா நடித்துள்ள “மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்”.. படம் எப்படி இருக்கு?

  • January 25, 2025
  • 0 Comments

நேற்றைய தினம் குடும்பஸ்தன், வல்லான் உட்பட பல படங்கள் திரையரங்கில் வெளியானது. அதில் பிக்பாஸ் பிரபலங்கள் மற்றும் யூடியூபர் கூட்டணியில் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் வெளியாகி இருக்கிறது. அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஹரிபாஸ்கர், ரயான், லாஸ்லியா நடித்துள்ள இப்படத்திற்கு தற்போது பாசிட்டி ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. கல்லூரியில் லாஸ்லியாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார் ஹரிபாஸ்கர். ஆனால் அவரோ இந்த காதலை ரிஜெக்ட் செய்கிறார். இதனால் கடுப்பாகும் ஹீரோ லாஸ்லியாவிடம் வேறு பொண்ணை காதலித்து வெற்றி பெறுவேன் என […]

இலங்கை

இலங்கையில் அச்சுறுத்தும் நோய் தொற்று – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • January 25, 2025
  • 0 Comments

இலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த மாதம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,650 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் டெங்கு நோயினால் இரண்டு பேர் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலே பதிவாகியுள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு […]

இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு – ஏமாற்றும் கும்பல் – 132 பேர் கைது

  • January 25, 2025
  • 0 Comments

இலங்கையர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் இவர்கள் பதிவாகியுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா இது தொடர்பில் தெரிவிக்கையில், சட்டவிரோதமாக இயங்கி வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் இடம்பெறும் பண மோசடிகள் தொடர்பில் 2023 ஆம் ஆண்டில் 3,675 முறைப்பாடுகளும் 2024 ஆம் ஆண்டில் […]

செய்தி வாழ்வியல்

இந்த அறிகுறிகள் இருந்தால் அவதானம் – வைட்டமின் டி குறைபாடாக இருக்கலாம்

  • January 25, 2025
  • 0 Comments

உடலின் சீரான செயல்பாட்டிற்கு பல வித ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. பல்வேறு வைட்டமின்கள், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து என இவை அனைத்தும் உடலில் சீரான செயல்பாட்டிற்கு தேவை. வைட்மின்களில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. நீண்ட காலத்திற்கு நோய்களிலிருந்து விலகி இருக்க விரும்பினால், உணவில் வைட்டமின் டி மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாடு கண்டிப்பாக இருக்கக்கூடாது. வைட்டமின் டி இன் மிகப்பெரிய ஆதாரம் சூரிய ஒளி ஆகும். எலும்புகள், தசைகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் […]