உயர்கல்வித் துறையில் அரசு அல்லாத நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து ஆராய்வு
இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது. உயர்கல்வித் துறையில் அரசு அல்லாத நிறுவனங்களின் பங்களிப்பு, அவற்றை மேலும் வினைத்திறனாக்குவதற்கான வாய்ப்புக்கள் மற்றும் தடைகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் உள்ள அரசு அல்லாத உயர்கல்வி நிறுவனங்களான நாகனந்தா நிறுவனம், SLINTE உயர்கல்வி நிறுவனம், ஈசொப்ட் மெட்ரோ கெம்பஸ், செய்ஜீஸ் கெம்பஸ், […]