மஹா கும்பாபிஷேகம் மலர் அலங்காரத்தில் முத்துப்பிடாரி அம்மன்
அறந்தாங்கி தாலுகா பாக்குடி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துப்பிடாரி அம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 1ம் தேதி புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 3 நாட்களாக 4கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை […]