ஆசியா செய்தி

இந்தோனேசியன் கால்பந்து மைதானத்தில் 135 பேர் பலியான சம்பவம்; இரு அதிகாரிகளுக்கு சிறை

  • April 16, 2023
  • 0 Comments

இந்தோனேஷியாவில் கால்பந்து மைதானத்தில் வெடித்த கலவரத்தில் பலர் பலியான சம்பவம் தொடர்பில், இரண்டு அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங்கில் அரேமா எஃப்சி மற்றும் பெர்செபயா சுரபயா அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது.அப்போது திடீரென கலவரம் வெடித்தது. ஆடுகளத்திற்குள் பலர் புகுந்தனர். இதனால் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இது பார்வையாளர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தப்பிக்க மக்கள் அலறியடித்து ஓடினர். அதில் […]

ஆசியா செய்தி

குறுந்தூர ஏவுகணையை ஏவி சோதனை செய்த வடகொரியா!

  • April 16, 2023
  • 0 Comments

வடகொரியா இன்றைய தினம் குறுந்தூர ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு கடற்கரையில் உள்ள கடல் பகுதியில் குறித்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கிம் ஜொங் உன்னின் சகோதரி அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டு இராணுவபயிற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் ஏவுகணை பரிசோதனை செய்யவுள்ளதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். அதேநேரம் இவ்வாண்டின் சில மாதங்களிலேயே வடகொரியா பெருமளவான ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசியா செய்தி

இந்தியா – பாகிஸ்தான் இடையோ போர் ஏற்படும் – அமெரிக்க புலனாய்வு இயக்குனரகம் எச்சரிக்கை!

  • April 16, 2023
  • 0 Comments

இந்தியா – பாகிஸ்தான் இடையோ போர் ஏற்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான அச்சுறுத்தல் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி கூறப்பட்டுள்ளது. காஷ்மீரில் வன்முறை, அமைதியின்மை அல்லது இந்தியாவின் மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றால் பதற்றம் அதிகரித்து இரு நாடுகள் இடையே போர் ஏற்படும் ஆபத்து உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கிழக்கு லடாக் எல்லை பகுதியில் படைகளை குவித்து, ஆக்கிரமிப்பில் […]

ஆசியா செய்தி

பட்டினி போட்டு 1000 நாய்களை கொடூர கொலை செய்த நபர்; வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

  • April 16, 2023
  • 0 Comments

தென் கொரியாவில் ஆயிரம் நாய்களை கூண்டில் அடைத்து, பட்டினி போட்டு நபர் ஒருவர் கொடூர கொலை செய்து உள்ளார். தென் கொரியாவின் வடமேற்கே அமைந்த கியாங்கி மாகாணத்தில் யாங்பியாங் நகரில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயை காணவில்லை என வீடு, வீடாக சென்று தேடி உள்ளார்.அப்படி சென்றபோது வீடு ஒன்றில் நாய்கள் அடைத்து வைக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்ட நிகழ்வை பார்த்து அதிர்ந்து போனார். இதுபற்றி கேர் என்ற விலங்குகள் உரிமை குழு ஆர்வலர்களுக்கு தகவல் […]

ஆசியா செய்தி

யேமன் படகு விபத்தில் 15 பேர் பலி : உடல்களை தேடும் மீட்புக் குழுவினர்!

  • April 16, 2023
  • 0 Comments

யேமன் படகு விபத்தில் 15 பேர் பலி : உடல்களை தேடும் மீட்புக் குழுவினர்! யேமன் செங்கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 14 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யேமனின் {ஹதைதா மாகாணத்தில் இந்த படகு விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மீன் வளத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. குறித்த ஹுதைதா மாகாணம் அந்த நாட்டின் ஹுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. கமரான் தீவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது கடுமையான காற்று […]

ஆசியா செய்தி

ஏமனில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 21 பேர் பலி

  • April 16, 2023
  • 0 Comments

ஏமனில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏமனில் ஹொடைடா துறைமுக நகரத்தின் அல்லுஹேயா கிராமத்திலிருந்து 27 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த குழுவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கமரன் தீவிற்கு செங்கடல் வழியாக படகில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது கமரன் தீவிற்கு அருகே செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்த விபத்துக்குள்ளானது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  பாதுகாப்பு […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்ட சட்டம்!

  • April 16, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் மேலும் ஒரு ஆண்டுக்கு கொரோனா தொடர்பான அதிகாரம் வழங்கும் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், அந்த காலகட்டத்தின்போது நோய் பரவினால் அந்த சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க முடியும் என்பது ஆகும். கடந்த 2020 ஆம் ஆண்டு நோய் பரவல் தொடக்க காலத்தில் அந்த தற்காலிக சட்டம் சிங்கப்பூரில் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், மேலும் ஒரு ஆண்டுக்கு அது நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின்கீழ் தான் நடமாட்ட கட்டுப்பாடுகள், முகக்கவசம் […]

செய்தி வட அமெரிக்கா

90 அடி உயர தூக்குப்பாலத்தில் செங்குத்தாக தொங்கிய இளைஞர்! வைரலான வீடியோ

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தூக்குப் பாலம் ஒன்றில் இளைஞர் ஒருவர் செங்குத்தாக தொங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான மியாமியில் பெரிய படகுகள் கடப்பதற்காக மிகப் பிரம்மாண்டமான தூக்குப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பிரிக்கல் அவின்யூ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த பாலம், திங்கட்கிழமை கீழே படகு செல்வதற்காக தூக்கப்பட்ட போது இளைஞர் ஒருவர் அந்த பாலத்தின் மீது செங்குத்தாக ஏறத் தொடங்கினார். ஒரு […]

ஆசியா செய்தி

சமநிலை இருக்கும் வரை தேர்தல்கள் இருக்காது – மரியம் நவாஸ் ஷெரீப்

  • April 16, 2023
  • 0 Comments

பிஎம்எல்-என் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பின் மகளுமான மரியம் நவாஸ் ஷெரீப், பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் ஷரீப்புக்கு செய்யப்பட்ட தவறான செயல்கள் சரி செய்யப்படும் வரை மற்றும் பிடிஐ தலைவர் இம்ரான் கான் பொறுப்பேற்கப்படும் வரை தேர்தல் நடத்தப்படாது என்று மீண்டும் உறுதியளித்துள்ளார். இம்ரான் கான் பொறுப்பேற்கும் வரை தேர்தல்கள் இருக்காது. சம நிலை இருக்கும் வரை தேர்தல்கள் இருக்காது என்று ஷேகுபுராவில் நடந்த ஒரு மாநாட்டில் PML-N தொழிலாளர்களிடம் ஷெரீப் கூறினார். […]

செய்தி வட அமெரிக்கா

டிரம்பை பார்த்து எனக்கு பயமில்லை..அவரது கைது வன்முறையைத் தூண்டும் – நடிகை ஸ்டோர்மி பரபரப்பு பேட்டி

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை பார்த்து எனக்கு பயமில்லை என அவரது முன்னாள் காதலியும், பிரபல நடிகையுமான ஸ்டோர்மி டேனியல்ஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் மீது ஏற்கனவே பல பெண்கள் துஷ்பிரயோகம் செய்ததாக புகார்கள் தெரிவித்துள்ளனர். 10 அதிகமான பெண்கள், டொனால்டு டிரம்ப் மீது துஷ்பிரயோக புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர்.இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்ப்புடனனான உறவு குறித்து அவர் […]