வீதியில் இறங்கிய மக்கள்;இஸ்ரேலில் வரலாறு காணாத போராட்டம் !
இஸ்ரேல் நாட்டில் நீதித்துறையில் அரசு செய்த மாற்றங்களுக்கு எதிராக நாடு முழுதும் வரலாறு காணாத புரட்சி நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் நாட்டில் புதிதாக இயற்றப்பட்ட நீதித்துறை தொடர்பான சட்ட மசோதாவிற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதித்துறை மறுசீரமைப்பு சட்ட மசோதாவின் படி அரசு நியமிக்கும் ஒன்பது பேர் கொண்ட குழுக்கள் மூலமாக, உச்சநீதிமன்றத்தைத் தவிர மற்ற நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதாகும். இச்சட்டத்தினால் மக்களின் ஜனநாயகம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும், இது நீதியைச் சிதைக்கும் […]