விவாகரத்து காரணமாக திருமண புகைப்படக் கலைஞரிடம் பணத்தை மீளக் கேட்ட பெண்
தென்னாப்பிரிக்க இளம் பெண், திருமண புகைப்படக்கார் ஒருவரை வழக்கத்திற்கு மாறாக கோரிக்கையுடன் அணுகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் விவாகரத்து செய்துவிட்டதாகவும், திருமண புகைப்படத்திற்காக செலுத்திய பணத்தை திருப்பி தர வேண்டும் என கோரி அந்த பெண் புகைப்படக்காரரிடம் கோரியுள்ளார். இது குறித்து புகைப்படக் கலைஞருக்கும் இளம் பெண்ணுக்கும் இடையேயான வாட்ஸ்அப் உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. “உனக்கு இன்னும் என்னை ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. 2019 இல் டர்பனில் எனது திருமணத்தை புகைப்படம் எடுத்தீர்கள். திருமண தருணங்களை […]