சோமாலியாவில் தற்கொலை குண்டு தாக்குதலில் 13 பேர் மரணம்
சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு மையத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தியவர் டாமன்யோ தளத்திற்கு வெளியே வரிசையில் நின்ற இளம் வீரர்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.