இலங்கை செய்தி

கொழும்பில் அதிர்ச்சி – மனைவியுடன் ஏற்பட்ட தகராறு – வீட்டை எரித்த கணவன்

  • April 11, 2023
  • 0 Comments

மொரட்டுவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொடசிறி மாவத்தை கடலான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றபோது, ​​கணவன் வீட்டிற்கு தீ வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானதுடன், பாடசாலை செல்லும் இருவரது […]

இலங்கை செய்தி

இலங்கையில் அடுத்தடுத்து பதிவான இரண்டு நிலநடுக்கங்கள்

  • April 11, 2023
  • 0 Comments

கிரிந்த பகுதியில் நேற்று மாலை சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக அது பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது. அதேபோல், இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோமரங்கடவல பகுதியிலும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை செய்தி

இலங்கையில் 3 பெண்கள் கழுத்து நெரித்து படுகொலை -சிக்கிய நபர்

  • April 11, 2023
  • 0 Comments

ல்பிட்டிய, அவிட்டாவ பிரதேசத்தில் மூன்று பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த நபர் சொத்துக்களை கொள்ளையடித்த வழக்குகள் தொடர்பிலும் கைது செய்யப்பட்டுள்ளார். எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யகிரல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​திருடப்பட்ட தங்க நெக்லஸ், 03 ஜோடி காதணிகள் மற்றும் கையடக்கத் […]

இலங்கை செய்தி

யாழில் 14 வயது சிறுமியை குடும்பம் நடத்த அழைத்து சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

  • April 11, 2023
  • 0 Comments

யாழப்பாணம் – மல்லாகம் பகுதியச் சேர்ந்த பாடசாலைக்குச் செல்லும் 14 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து குடும்பம் நடத்த அழைத்து சென்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சிறுமியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞன் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த  20 வயதுடைய நபர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 14 வயது சிறுமி பாடசாலைக்கு செல்ல முற்பட்ட போது சிறுமியை அழைத்துக் கொண்டு புதுக்குடியிருப்புக்கு பகுதிக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸில் சிறுமியின் பெற்றோரினால் […]

இலங்கை செய்தி

இலங்கையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள லிஸ்டீரியா – மருத்துவர் விடுக்கும் எச்சரிக்கை

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள லிஸ்டீரியா (Listeria) மொனோசைட்டஜன் பக்றீறியா தொற்று, உணவு மற்றும் நீரின் ஊடாக பரவக்கூடிய ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர், லிஸ்டீரியா (Listeria) நோயால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம், லிஸ்டீரியா பக்றீரியா தொற்று அறிகுறியுடைய சந்தேகத்தில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். […]

இலங்கை செய்தி

கொழும்பில் துப்பாக்கிச் சூடு

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பு கொட்டாஞ்சேனை, பரமானந்த மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான சரியான காரணம் வெளியாகவில்லை. கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கை செய்தி

புட்டினை கைது செய்ய உத்தரவு – உக்ரைன் ஜனாதிபதி வரவேற்பு

  • April 11, 2023
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் நேற்று இரவு செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனில் இருந்து சட்டவிரோதமாக குழந்தைகளை நாடு கடத்தியது உள்ளிட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக புடினுக்கு எதிராக இத்தகைய வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் […]

இலங்கை செய்தி

ஓடும் ரயிலை நிறுத்த குறுக்கே வந்து நின்ற நபருக்கு நேர்ந்த கதி

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உதார மெனிகே ரயிலை நிறுத்த முயன்ற நபர் ஒருவர் பலத்த காயமடைந்து டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் (18) அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். (18) ரொசெல்ல மற்றும் ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கு இடையில், ஹட்டன் மல்லியப்புவ பகுதியில் பிற்பகல் 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நான்கு நாட்களுக்கு முன், வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ரயில் தண்டவாளத்தின் நடுவே ஓடும் ரயிலை நிறுத்த முயன்ற 41 வயதுடைய நபர் ரயிலில் […]

இலங்கை செய்தி

துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட இளம் பெண்

  • April 11, 2023
  • 0 Comments

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி கடந்த 10ம் திகதி இரவு 9.30 மணியளவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில், அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொலையைச் செய்தாரா என்பதை உறுதிப்படுத்த அவரது DNA மாதிரிகள் மற்றும் […]

இலங்கை செய்தி

சர்வதேச நாணய நிதிய உதவியைத் தொடர்ந்து 7 பில்லியன் டொலர் நிதி உட்பாய்ச்சல் – இலங்கை நம்பிக்கை

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கடன்வழங்குனர்களின் நிதியியல் உத்தரவாதம் உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளும் இலங்கையால் பூர்த்திசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இச்செயற்திட்டம் நாளை மறுதினம் (20) சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ்வுதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியதன் பின்னர் அடுத்துவரும் 4 வருடகாலத்தில் 2.9 பில்லியன் டொலர் நிதி இலங்கைக்குக் கட்டம்கட்டமாக வழங்கப்படும். இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் உதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதி […]