இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

50 சதவீத இறப்பு விகிதம் : விவரிக்க முடியாத இரத்த போக்கை ஏற்படுத்தும் கொடிய வைரஸ்!

  • February 15, 2025
  • 0 Comments

50 சதவீத இறப்பு விகிதத்தைக் கொண்ட “விவரிக்க முடியாத இரத்தப்போக்கை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.  உலக சுகாதார அமைப்பு இதனை (WHO) உறுதிப்படுத்தியுள்ளது. சூடானில் பரவி வரும் இந்த வைரஸ் தொற்று காரணமாக 32 வயது ஆண் செவிலியர் உயிரிழந்துள்ளார். செவிலியரின் குடும்பத்தினருக்கும் அவர்கள் பணிபுரிந்த மருத்துவமனையிலும் இரண்டு முக்கிய தொற்றுகள் இருப்பதாக WHO தெரிவித்துள்ளது. இதுவரை தடுப்பூசி இல்லாத ஒன்பது உறுதிப்படுத்தப்பட்ட வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. 1976 ஆம் ஆண்டு இந்த வைரஸ் முதன்முதலில் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வானிலையில் ஏற்படும் மாற்றம் : வார இறுதியில் சாதகமான நிலை!

  • February 15, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் உறைபனி மழை, மற்றும் பனிப்பொழிவு ஆகியவை ஏற்படும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் வார இறுதியில் வானிலை சில மாற்றங்கள் ஏற்படும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் வானிலை சேவைகளின் மூத்த வானிலை ஆய்வாளர் ஜிம் டேல், “இப்போதைக்கு குளிர்” என்றாலும், அடுத்த வாரத்தின் நடுப்பகுதி அவ்வளவு குளிராக இருக்காது எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக புதன்கிழமை பிற்பகலில் 10-12C அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் எனவும் அவர் கணித்துள்ளார்.

வட அமெரிக்கா

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதான அமெரிக்க வரிகள் ஏப்ரல் 2ம் திகதிக்குள் அமலுக்கு வரும் ; டிரம்ப்

  • February 15, 2025
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மோட்டார் வாகனங்களுக்கு ஏப்ரல் 2 புதிய வரிவிதிப்பை அறிவிக்கப் போவதாகக் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) எரிசக்திக் கொள்கை குறித்த நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டபோது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். ஏற்கெனவே வர்த்தகப் போர் விரிவடைந்துவரும் வேளையில், டிரம்ப் அடுத்தடுத்து வரிவிதிப்புகளை அறிவிப்பது, நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யும் என அஞ்சப்படுகிறது. ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியாவில் இயங்கும் பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு […]

உலகம்

சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம் இன்று : ஆண்டுதோறும் 400,000 குழந்தைகள் பாதிப்பு!

  • February 15, 2025
  • 0 Comments

சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படுகிறது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400,000 புதிய குழந்தைப் பருவப் புற்றுநோய்கள் கண்டறியப்படுகின்றன. தேசிய புற்றுநோய் பதிவேட்டின்படி, 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் 1032 குழந்தை பருவ புற்றுநோய் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 578 சிறுவர்களும் 454 சிறுமிகளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். பதிவாளர் ஜெனரல் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டில் குழந்தை பருவ புற்றுநோயால் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை […]

ஐரோப்பா

ரஷ்யாவின் அல்தாய் பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்த நிலநடுக்கம்

  • February 15, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் தெற்குப் பகுதியான அல்தாயில் சனிக்கிழமை அதிகாலை 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:48 மணிக்கு (0148 GMT) இந்த நிலநடுக்கம் பதிவானது. அல்தாய் குடியரசின் தலைநகரிலிருந்து தென்கிழக்கே சுமார் 282 கிமீ தொலைவில், கோஷ்-அகாச் கிராமத்திலிருந்து மேற்கே சுமார் 28 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ரஷ்ய […]

மத்திய கிழக்கு

காசாவில் சிறைப்பிடிக்கப்பட்ட 03 இஸ்ரேலியர்களை விடுதலை செய்ய வாய்ப்பு!

  • February 15, 2025
  • 0 Comments

காசா ஸ்ட்ரிப்பில் சிறைபிடிக்கப்பட்ட மேலும் மூன்று இஸ்ரேலியர்கள் இன்று (15.02)  விடுவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேல் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகளை இதற்கு  ஈடாக விடுவிக்க வேண்டும். போர் நிறுத்தம் ஒப்பந்தம் சமீபகாலமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த தகவல் வந்துள்ளது. காசாவிலிருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை அகற்றி, பிராந்தியத்தில் வேறு எங்கும் குடியேற ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்கா

காங்கோவில் கைவிடப்பட்ட நிலையில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட 70 பேரின் உடல்கள் மீட்பு!

  • February 15, 2025
  • 0 Comments

காங்கோவில் கைவிடப்பட்ட கிராமத்தில் தலை துண்டிக்கப்பட்ட 70 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏடிஎஃப் கிளர்ச்சியாளர்களின் பணயக்கைதிகளின் உடலே இவ்வாறு மீட்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கசங்காவில் உள்ள ஒரு புராட்டஸ்டன்ட் தேவாலயத்தில் இந்த உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. ஏடிஎஃப் – அதனுடன் இணைந்த பாதுகாப்புப் படைகள் – ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை இப்பகுதியில் மிகவும் கொடிய ஆயுதக் குழுவாகக் காணப்படுகின்றன.  

பொழுதுபோக்கு

பல ஹீரோயின்ஸ் என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க…பிரதீப் ரங்கநாதன் ஓபன்…

  • February 15, 2025
  • 0 Comments

‘கோமாளி’ படம் மூலமாகை இயக்குநராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். சென்னையில் பிறந்து வளர்ந்து ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். நாளடைவில் அந்த வேலையை விட்டு விட்டு யூடியூப்பில் பிரபலமானார். இதைத் தொடர்ந்து அவர் இயக்கிய முதல் படம் தான் ‘கோமாளி’. வித்தியாசமான கதையுடன் வந்த இந்தப் படத்தின் மூலமாக தன்னை ஒரு இயக்குநராக காட்டினார். ரவி மோகனுக்கு இந்தப் படம் திருப்பு முனையை ஏற்படுத்தியது. யதார்த்தமான கதை, யதார்த்தமான நடிப்பு என்று எல்லாவற்றையும் ரசிக்கும் படி […]

செய்தி

யாழ் உணவகத்தில் அடிதடி – பொலிஸ் நிலையத்தில் அர்ச்சுனா சமரசம்

  • February 15, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாடாளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த இருவர், அவர்களுடன் கதைக்க முற்பட்ட நிலையில், தர்க்கமாக மாறி கைக்கலப்பில் முடிந்தது. கைக்கலப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நபர் ஒருவரின் தலையில் […]

பொழுதுபோக்கு

ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து – இலங்கைப் பெண் ஜனனிக்கு பலத்த காயம்

  • February 15, 2025
  • 0 Comments

நிழல் படத்தின் படப்பிடிப்பின் போது இலங்கையைச் சேர்ந்த நடிகை ஜனனி குணசீலனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்தவர் நடிகை ஜனனி குணசீலன். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். இதே போன்று குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். தனக்கான சின்ன சின்ன ரோல்களில் நடித்து வரும் ஜனனிக்கு அவ்வவ் போது சினிமாவில் நடிக்கும் […]