இலங்கை செய்தி

இலங்கைக்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் – ஜனாதிபதி ரணில்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையை முன்னோக்கி  கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் முற்பகல் நடைபெற்ற IMF மற்றும் அதற்கு அப்பால் கலந்துரையாடலில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி கலந்துரையாடலில் கலந்து கொண்டு […]

இலங்கை செய்தி

யால பூங்காவில் இருக்கும் கரும்புலியின் உயிருக்கு ஆபத்து

  • April 12, 2023
  • 0 Comments

யால பூங்காவில் கரும்புலி நடமாடும் ஜபுரகல பிரதேசத்தை சுற்றுலாப் பயணிகளுக்காக மூடுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்ததையடுத்து, அந்த மிருகத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த விலங்கின் பாதுகாப்பு கருதி நேற்று (29) முதல் குறித்த பகுதியை மூடுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. யால பூங்காவில் 7 மாத கரும்புலி சுற்றித் திரிவதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், நேற்று (28) புகைப்படக் கலைஞர் ஒருவர் அந்த விலங்கைப் படம் பிடித்து சமூக […]

இலங்கை செய்தி

வெடுக்குநாறி சம்பவம் குறித்து விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு

  • April 12, 2023
  • 0 Comments

வுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விளைவிக்கப்பட்ட சேதம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். தொல்பொருள் திணைக்களத்துடன் வவுனியாவிலும், கொழும்பிலும் இரண்டு சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும்இ இன்னும் அந்த பிரச்சினை தொடர்கிறது. வனபாதுகாப்பு திணைக்களத்துடனும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன. அவ்வாறான பிரச்சினைகள் வடக்கில் மாத்திரமன்றி வடமத்திய மாகாணத்திலும் மொனராகலை மாவட்டத்திலும் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  

இலங்கை செய்தி

பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஆலயத்தின் விக்கிரகங்கள் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு!

  • April 12, 2023
  • 0 Comments

பலாலியில்  இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்பட்ட  விக்கிரகங்கள் இரண்டினை காணவில்லை என ஆலய பரிபாலன சபைத் தலைவர் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார். அத்துடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் விக்கிரங்கள் காணாமல் போயுள்ளமை சம்மந்தமாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1846 ஆம் ஆண்டு  அம்மன் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கே ஒவ்வொரு கடவுளர்களின் விக்கிரகங்களும் வைக்கப்பட்டிருந்தன. அன்றைய காலம் […]

இலங்கை செய்தி

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கரிசனை!

  • April 12, 2023
  • 0 Comments

அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவதுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொறுப்புக்கூறலை உறுதிசெய்கின்றது என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாகப் பிறிதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டது. இது குறித்து விசனம் வெளியிட்டுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் குறித்த சட்டத்தின் உள்ளடக்கங்கள்,  பயங்கரவாதத்தடைச்சட்டத்தை விடவும் மிகமோசமானதாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அவசரகாலநிலை […]

இலங்கை செய்தி

யாழில் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராய விசேட கூட்டம்!

  • April 12, 2023
  • 0 Comments

யாழ். வடமராட்சியில் இருந்து  தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனை சாவடியினை தாண்டியே செல்ல வேண்டும் அவ்வாறு செல்வதன் மூலம் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவோர் கைது செய்யக்கூடியதான சாத்தியக்கூறு காணப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று நேற்று மாலை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் […]

இலங்கை செய்தி

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய இருக்கும் 40 உறுப்பினர்கள்!

  • April 12, 2023
  • 0 Comments

)ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 40க்கும் அதிகமானவர்கள் விரைவில் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட இருக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (29)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர்,  பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுத்த சில தீர்மானங்கள் மக்களுக்கு கஷ்டமாக இருந்தபோதும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின் பின்னர் […]

இலங்கை செய்தி

பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம்: சற்று பதற்றமான சூழல்

  • April 12, 2023
  • 0 Comments

வளைக்கு அண்மையில் உள்ள கடலில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இச்செய்தியை அடுத்து அங்கு சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பேருவளையில் இருந்து கடலுக்குச் சென்றவர்கள் தொடர்பில், அங்குள்ளவர்கள் கவலையடைந்துள்ளனர். அத்துடன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கு பெரும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை செய்தி

இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராய்வு!

  • April 12, 2023
  • 0 Comments

இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட இந்திய ரிசேர்வ் வங்கியின் ஆளுநர் ஸ்ரீ சக்திஹன்ட தாசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமூகமான சூழ்நிலையில் இடம்பெற்றுள்ளனஇஇருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு உட்பட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்கான இந்தியாவின் உதவிகளிற்கு இந்த சந்திப்பில் மிலிந்தமொராகொட நன்றியை தெரிவித்துள்ளார்.  

இலங்கை செய்தி

முதலீட்டாளர்கள் மற்றும் கடன்வழங்குனர்களுக்கு இன்று செயற்திட்ட விளக்கம் அளிக்கிறது இலங்கை

  • April 12, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைத் தொடர்ந்து அரசாங்கமானது இன்றைய தினம் கடன்வழங்குனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நிகழ்நிலை முறைமையின் ஊடாக தமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றிய செயற்திட்ட விளக்கத்தை (ப்ரசென்டேஷன்) அளிக்கவுள்ளது. நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை கடந்த 20 ஆம் திகதி அனுமதியளித்துள்ளது. அதனையடுத்து இலங்கையின் கடன்வழங்குனர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இன்றைய தினம் (30) நிகழ்நிலை முறைமையின் ஊடாக […]