கோனியம்மன் கோவில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது
கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் டவுன்ஹால் பகுதியில் கோனியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தேர்த்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இக்கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பிற மாவட்ட பக்தர்களும் வருகை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு செல்கின்றனர். இத்தேரானது ராஜவீதியில் உள்ள தேர் முட்டியில் தொடங்கி ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் முட்டியை அடைகிறது. இத்தேர் திருவிழாவை ஒட்டி இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. கோவை உட்பட பல்வேறு […]