இலங்கை செய்தி

நியாயமற்ற உயர் வரியறவீட்டு வீதம் வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும்

  • April 11, 2023
  • 0 Comments

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் வேளையில், ஒரே தடவையில் வரிவருமானத்தை 200 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு முற்படுவது பொருத்தமற்றதாகும். வரியறவீட்டு வீதம் நியாயமற்றவகையில் மிகவும் உயர்வாகக் காணப்படும்போது வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது பல்வேறு வழிகளிலும் நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்று துறைசார் நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகள் எச்சரித்துள்ளனர். இலங்கைக்கு ஏற்றவாறான நியாயமானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புடன்கூடியதுமான வரியறவீட்டு முறைமை தொடர்பான 32 பக்கங்களைக்கொண்ட முன்மொழிவொன்று தொழில்சார் நிபுணர்களின் தொழிற்சங்கக்கூட்டணியினால் வெளியிடப்பட்டுள்ளது. பேராசிரியர் […]

இலங்கை செய்தி

கொழும்பு, களனி பல்கலைக்கழகங்களுக்குள் பாதுகாப்புத்தரப்பினர் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் அவசியம்

  • April 11, 2023
  • 0 Comments

அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள்மீது நடாத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிப்பதாகவும், கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழக வளாகத்துக்குள்  பொலிஸாரும் இராணுவத்தினரும் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உயர்கல்வி பயிலும் 1000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இலங்கையின் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர்களின் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்துக்கு எதிரான ஒடுக்கு முறைகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி சேஞ்ச் அமைப்பின் ஊடாக வரதாஸ் தியாகராஜாவினால் இணையவழியில் […]

இலங்கை செய்தி

வர்த்தகர்கள், பல்துறைசார்ந்த கடன் பெறுநர்களுக்குப் புதிய சலுகைகள்

  • April 11, 2023
  • 0 Comments

பல்துறைசார்ந்த வர்த்தகர்கள் மற்றும் தனியார்துறையினர் ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் முடிவடைந்திருக்கும் நிலையில், அவர்களின் கடன்மீள் செலுத்துகை செயன்முறையை இலகுபடுத்தும் நோக்கில் மேலதிக சலுகைகளை வழங்குமாறு நிதியியல் கட்டமைப்புக்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தாம் ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதில் வர்த்தகர்கள் மற்றும் பல்துறைசார்ந்தோர் பலதரப்பட்ட சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், புதிதாக வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தொடர்பில் மத்திய வங்கி மேலும் கூறியிருப்பதாவது: கொவிட் – 19 வைரஸ் […]

இலங்கை செய்தி

இந்து ஆலயங்களை மீள் நிர்மாணிக்க அனுமதி வழங்க வேண்டும் – ஆறுதிருமுருகன் கோரிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

அழிக்கப்பட்ட ஆலயங்களை மீளக்கட்டுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் ஏனைய ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் புத்தர் சிலைகள் நிர்மாணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை சைவமக்களின் மிகத்தொன்மை வாய்ந்த வரலாற்றிடம் கிரிமலை இப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமான […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு உதவும் வாய்ப்பை ஜி-20 நாடுகள் தவறவிட்டுள்ளன சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி

  • April 11, 2023
  • 0 Comments

அண்மையில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில், கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் உலகளாவிய ஆய்வாளரும் கொள்கை ஆலோசகருமான சன்ஹிதா அம்பாஸ்ற் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி இலங்கையின் 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு இலங்கையை இக்கடன்நெருக்கடியிலிருந்து விடுவிப்பது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் சவால்கள் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது. […]

இலங்கை செய்தி

ஆர்ப்பாட்டங்களின் போது காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டனவா : பொலிஸார் விளக்கம்!

  • April 11, 2023
  • 0 Comments

காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் செயலிழந்தவையாகவும் , செறிவு குறைந்தவையாகவுமே காணப்படும் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கடந்த வாரம் கொழும்பிலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பாதுகாப்பு தரப்பினரால் காலாவதியானதும் , விஷத்தன்மையுடையதுமான கண்ணீர்ப்புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவற்றைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாது. சில தரப்பினரால் தெரிவிக்கப்படுவதைப் போன்று கடந்த வாரங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பிரயோகிக்கப்பட்ட கண்ணீர்ப்புகைக் […]

இலங்கை செய்தி

பிரின்சஸ் குரூஸ் அதி சொகுசு கப்பல் இலங்கை வருகை!

  • April 11, 2023
  • 0 Comments

அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான பிரின்சஸ் குரூஸ் என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் 1894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை 7 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பலில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 159 பேர் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இறங்கிய பின்னர் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர். மேலும், தாய்லாந்தின் ஃபூகெட் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு வந்த இந்த கப்பல் […]

இலங்கை செய்தி

முடிந்தால் நீதிபதிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து பாருங்கள் : அனுரகுமார திஸாநாயக்க சவால்!

  • April 11, 2023
  • 0 Comments

உயர்நீதிமன்றத்தின் இடையுத்தரவால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் உறுப்பினர் முன்வைத்துள்ள சிறப்புரிமை மீறல் பிரேரணை முற்றிலும் தவறானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், பாராளுமன்றத்தை உயர்நீதிமன்றம் பலப்படுத்தியுள்ளது, முடிந்தால் நீதிபதிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து பாருங்கள், அடுத்து நிகழ்வதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனவும் சவால் […]

இலங்கை செய்தி

எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலையும் குறைவடையும் என அறிவிப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலரின் பெறுதிக்கு ஏற்ப எதிர்வரம் நாட்களில் எரிபொருளின் விலையும் குறைவடையும் என சபை முதல்வர சுஸில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று சர்வஜன வாக்குரிமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், தற்போதைய நிலைமையில் பொருட்களின் விலைகள் மீண்டும் குறைவடையும். எரிபொருள் விலையும் எதிர்வரும் நாட்களில் குறைவடையும். அடுத்ததாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் டொலரின் பெறுமதிக்கு ஏற்றால் போன்று இறக்கப்படும். இதன்போது விலை குறைவடையும். இது மக்களுக்கு கிடைக்கும். […]

இலங்கை செய்தி

பாராளுமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் சிறப்புரிமை பிரச்சினையை கொண்டுவருவோம் – நளின் பண்டார!

  • April 11, 2023
  • 0 Comments

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் ஜனாதிபதிக்கு எதிராக சிறப்புரிமையை பிரச்சினையை கொண்டுவருவோம் என எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்றால் அதன் பெறுபேறு எவ்வாறு அமையும் என்பது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரியும். அதனால் அவர் ஒருபோதும் […]