15 ஆண்டுகளாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை!
15ஆண்டுகளாக சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதி சதீஸ்குமார் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இவருக்கு, பெப்ரவரி முதலாம் ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சதீஸ்குமார், ஏற்கனவே உச்ச நீதிமன்றில் மேல் முறையீடு செய்திருந்தார். இதனை மீளப் பெறுவதற்கான கோரிக்கை பெப்ரவரி 23 சட்டத்தரணியூடாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மனுதாரரின் மேல் முறையீட்டு மனுவினை மீளளித்த உச்ச நீதிமன்றம் குறித்த வழக்கினை […]