தினேஷ் சாப்டரின் மரண விசாரணை ஒத்திவைப்பு!
பிரபல தொழிலதிபர தினேஷ் சாப்டரின் மரணம் குறித்த விசாரணைகளை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது இதன்படி குறித்த மரண விசாரணை எதிர்வரும் 22 திகதிவரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த மரணம் தற்செயலானதா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க ஐந்து பேர் கொண்ட விசேட மருத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.