பொழுதுபோக்கு

அர்ச்சனா கல்பாத்தியுடன் கை கோர்த்துள்ளார் சிவகார்த்திகேயன்

  • February 18, 2025
  • 0 Comments

அமரன் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கைவசம் இரண்டு படங்கள் வைத்திருக்கிறார். சுதா கொங்கரா உடன் பராசக்தி படம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்திகேயன் தனது படத்திற்காக ஏஜிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார். அந்த படத்தை ஒரு பெரிய இயக்குனர் இயக்கப்போவதாகவும் அர்ச்சனா கல்பாத்தி பேட்டி கொடுத்து இருக்கிறார். இருப்பினும் அந்த இயக்குனர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்த பிரம்மாண்ட பட்ஜெட் படம் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க நடவடிக்கை

  • February 18, 2025
  • 0 Comments

இலங்கையில் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கோதுமை மாவின் விலை குறைப்பைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ் தம்பதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

  • February 18, 2025
  • 0 Comments

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். போலி விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மனைவியும் 40 வயதுடைய கணவனுமே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் செல்வதற்காக நேற்றைய தினம் இரவு 08.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது, […]

இந்தியா செய்தி

இந்தியாவில் சிறுமியின் ஓவியத்தால் தாயின் கொலையின் மர்மம் வெளியானது

  • February 18, 2025
  • 0 Comments

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பெண் ஒருவர் இறந்து கிடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர் 27 வயதான சோனாலி புடோலியா, ஒரு பிள்ளையின் தாயாகும். இருப்பினும், இந்த மரணம் தற்கொலையாகக் காட்டப்பட்டதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன, ஆனால் அவரது நான்கு வயது மகள் வரைந்த ஒரு வரைபடம் விசாரணையை வேறு பாதைக்கு இட்டுச் சென்றது. மரணம் குறித்து மகள் கூறுகையில், தனது தந்தை தனது தாயை அடித்துக் கொன்று […]

செய்தி வாழ்வியல்

அளவுக்கு அதிகமான இளநீர் நல்லதல்ல

  • February 18, 2025
  • 0 Comments

இளநீர் குடிப்பது ஆரோக்கியமானது. உடலில் நீர்சத்து குறையாமல் இருக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ, இரும்பு, கால்சியம், தாமிரம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தினமும் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இளநீரினால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுவதோடு, குடல் ஆரோக்கியத்திற்கும் பல அற்புத நன்மைகளை தருகிறது. எனினும், இளநீர் எல்லோருக்கும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனை அளவிற்கு […]

ஐரோப்பா செய்தி

போப் பிரான்சிஸுக்கு தொடா்ந்து சிகிச்சை – சிக்கலான நிலையில் நோய் நிலைமை

  • February 18, 2025
  • 0 Comments

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸுக்கு (88) தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவரது நோய் சிக்கலான நிலையில் இருப்பதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது. மூச்சுக் குழாய் அழற்சி (பிராங்கைடஸ்) பாதிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்ட போப் பிரான்சிஸுக்கு நீண்ட காலமாகவே உடல்நலப் பிரச்னைகள் இருந்துவருகின்றன. இந்த நிலையில், பிராங்கைடஸ் அறிகுறிகள் முற்றி ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அவா் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.    

செய்தி

இலங்கையில் இன்று முதல் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்!

  • February 18, 2025
  • 0 Comments

இலங்கையில் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று முதல் எச்சரிக்கை மட்டத்தை விட அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் இந்த நிலை ஏற்படக் கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக வீடுகளில் உள்ள முதியோர் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வாகனத்திற்குள் சிறார்களைத் தனிமையில் விட்டுச் செல்ல வேண்டாம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன், கணினிகளுக்கு இனி தேவையே இருக்காது

  • February 18, 2025
  • 0 Comments

சுமார் 30 ஆண்டுகளாக உலக மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத அம்சமாக ஸ்மார்ட்ஃபோன்கள் மாறிவிட்டன. இந்நிலையில் தொழில்நுட்ப உலகில் அடுத்த திருப்பத்தை தர தொழிலதிபர் சாம் ஆல்ட்மேன் திட்டமிட்டுள்ளார். ஏஐ தொடர்பான அனைத்து வித சேவைகளையும் வழங்கும் ஒரு சாதனத்தை ஆல்ட்மேன் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. சாமானிய மனிதர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பல்வேறு வசதிகளுக்கு இச்சாதனம் தீர்வு தரும் எனக்கூறப்படுகிறது. ஆப்பிள் ஐஃபோன், ஐபேடு, ஐமேக் போன்றவற்றை வடிவமைத்ததின் சூத்திரதாரியான ஜானி இவ் (jony ive) […]

விளையாட்டு

ரிஷப் பண்ட்டை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா பந்து.!

  • February 18, 2025
  • 0 Comments

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வருவதால், ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி, பிப்ரவரி 20 ஆம் திகதி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, இந்திய அணி துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. டெல்லியில் இருந்து இரு தினங்களுக்கு முன் அபுதாபி புறப்பட்ட இந்திய அணி, துபாயில் தரையிறங்கிய பிறகு ஓய்வை தவிர்த்துவிட்டு உடனடியாக பயிற்சியில் களமிறங்கியது. சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு எதையும் விட்டுவிடக்கூடாது என்ற இந்திய […]

ஆசியா

சீனாவில் திருமணத்தைப் பதிவுசெய்யச் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • February 18, 2025
  • 0 Comments

சீனாவின் குவாங்சி பகுதியில் தமது திருமணத்தைப் பதிவுசெய்யச் சென்ற பெண், ஏற்கனவே 6 முறை திருமணம் செய்துள்ள பதிவுகள் கிடைத்துள்ளது. இதனை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். 33 வயதான அந்தப் பெண் மணமகனுடன் திருமணப் பதிவகத்திற்குச் சென்றார். அங்கு 2013ஆம் ஆண்டிற்கும் 2014ஆம் ஆண்டிற்குமிடையே அந்தப் பெண்ணின் பெயரில் 6 திருமணங்கள் பதிவானது தெரியவந்தது. ஏற்கனவே திருமணமானவர் என்ற பதிவுள்ளதால் அவர் அன்று திருமணம் செய்யமுடியாது என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் அந்தத் திருமணங்கள் பற்றி தமக்கு […]