உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

  • February 22, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மாற்றமடைந்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.40 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.43 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 4.23 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அரசியல்வாதிக்கு அச்சுறுத்தல் விடுத்தவருக்கு 5 வருட சிறைத்தண்டனை

  • February 22, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினரையும் மிரட்டியிருந்தார். நேற்று இந்த 29 வயது இளைஞனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து பல மின்னணு சாதனங்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்கு மூன்று கஞ்சா செடிகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பொருட்களையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரை, […]

ஆசியா

கொரோனாவை போன்று புதிய வைரஸ் தொற்று – சீனா விஞ்ஞானிகள் அதிர்ச்சி

  • February 22, 2025
  • 0 Comments

மனிதர்களிடையே பரவும் புதிய வகை கொரோனா வைரஸை தற்போது கண்டறிந்துள்ளதாக சீன வைரஸ் நிபுணர் Shi Zhengli அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை ஏற்படுத்திய வைரஸோடு பல வகைகளில் ஒற்றுமை கொண்டுள்ள இந்த வைரஸுக்கு HKU5 என பெயரிடப்பட்டுள்ளது. பல வகைகளில் நூற்றுக்கணக்கான கொரோனா வைரஸ்கள் உள்ளன. அவற்றில், SARS, SARS-CoV-2, MERS மற்றும் இன்னும் சில உள்ளிட்ட ஒரு சில மட்டுமே மனிதர்களைப் பாதிக்கின்றன. சமீபத்திய ஆய்வின் மூலம், ஷி ஜெங்லியின் நிபுணர் குழு, மனிதர்களைப் பாதிக்கக்கூடிய […]

இந்தியா செய்தி

மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் – இந்திய பிரதமர் மோடி கோரிக்கை

  • February 22, 2025
  • 0 Comments

புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி மொழி குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “மொழி அடிப்படையில் பிளவுகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது, இந்தியாவின் பன்முக மொழி பாரம்பரியம் அதற்கு பொருத்தமான பதிலடி கொடுக்கிறது. மராத்தி உட்பட அனைத்து முக்கிய மொழிகளிலும் கல்வியை ஊக்குவித்து வருகிறது. “இந்திய மொழிகளுக்கிடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை. ஒவ்வொரு மொழியும் மற்றொரு மொழியை […]

செய்தி

iPhone SE 4: தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

  • February 22, 2025
  • 0 Comments

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் பிப்ரவரி 19-ம் திகதி ஒரு புதிய தயாரிப்பின் வருகையை அறிவித்தார், ஐபோன் எஸ்இ4 (iPhone SE 4) போனில் என்ன ஸ்பெஷல் என்பதைத் தெரிந்துகொள்ள பலரும் ஆவலாக உள்ளனர். ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் SE 4 ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. வெளியீட்டு நிகழ்வு எதுவும் இல்லை. ஆனால், புதிய ஐபோன் குறித்து எதிர்பார்ப்பு இருப்பது தெரிகிறது. மிகவும் மலிவு விலையில் உள்ள ஐபோனின் வடிவமைப்பு மற்றும் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து முதல் மாதத்தில் 37,660 பேரை நாடு கடத்திய டொனால்ட் ட்ரம்ப்

  • February 22, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் மாதத்தில் 37,660 பேரை நாடு கடத்தியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் இறுதி ஆண்டில் காணப்பட்ட மாதாந்திர சராசரியை விட நாடுகடத்தலின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி மற்றும் நிபுணர் ஒருவர், வரும் மாதங்களில் நாடுகடத்தல்கள் அதிகரிக்கும் என்றும், கைதுகள் மற்றும் வெளியேற்றங்களை மேலும் விரைவுபடுத்த டிரம்ப் பாடுபடுவார் என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவில் இருந்து […]

செய்தி விளையாட்டு

குறைந்த பந்துகளில் 200 – ஷமியின் சாதனை வரலாறு

  • February 22, 2025
  • 0 Comments

வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி ஒரு நாள் போட்டியில் ஆடிய இந்திய வீரர் முகம்மது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவர் மொத்தத்தில் 5,126 பந்துகள் வீசி 200வது விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் 200 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன், ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் 5,240 பந்துகளில் 200 விக்கெட் வீழ்த்தியதே உலக சாதனையாக […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

கொழும்பில் துப்பாக்கிதாரிகள் இருவரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

  • February 22, 2025
  • 0 Comments

கொட்டாஞ்சேனை – கொட்டாஞ்சேனை வீதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு சந்தேகநபர்களும் பொலிஸ் விசாரணையின் போது பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ளனர். இதன் போது குறித்த சந்தேகநபர்கள் இருவரின் மீதும் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இலங்கை

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய திட்டம்

  • February 22, 2025
  • 0 Comments

இலங்கையில் Clean Sri Lanka திட்டத்துடன் இணைந்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பொலிதீன் பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கும் முழு சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் நோக்கத்துடன் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றாடல் அதிகாரசபை, சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் இணைந்து, பொலிதீன் பிளாஸ்டிக்கை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பேரழிவு குறித்து உற்பத்தியாளர்கள், கடை உரிமையாளர்கள், கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கொழும்பு புறக்கோட்டைப் […]

ஐரோப்பா செய்தி

முடிவுக்கு வரும் போர்? உக்ரேன் – அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு!

  • February 22, 2025
  • 0 Comments

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கீக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசேட தூதுவருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, உக்ரேன் யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு நம்பகரமான மற்றும் தெளிவான பாதுகாப்பு உத்தரவாதங்களின் அவசியம் குறித்து விவாதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ற்ஸ், இந்த வாரத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை யுக்ரேன் ஜனாதிபதி முன்வைத்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதன்காரணமாக அமெரிக்க ஜனாதிபதி […]