ஐரோப்பா செய்தி

ரஷ்யா வானத்தில் மர்ம பொருள் – இரத்து செய்யப்பட்ட விமானச் சேவைகள்

  • April 13, 2023
  • 0 Comments

ரஷ்ய வானத்தில் அடையாளம் தெரியாத ஒரு பொருள் தென்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. St. Petersburg நகரிலுள்ள Pulkovo விமானநிலையம், எல்லா விமானச் சேவைகளையும் தற்காலிகமாக இரத்து செய்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டன. அந்தப் பொருள் ஆளில்லா வானூர்திபோல் தென்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 மணிவரை எல்லா விமானச் சேவைகளும் நிறுத்தப்பட்டதாக, St. Petersburg நகரத்தின் அதிகாரத்துவ Telegram தளத்தில் தெரிவித்தது. ஆனால், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. Pulkovo விமான நிலையத்தின் 200 கிலோமீட்டர் […]

ஐரோப்பா செய்தி

மகளின் மரணத்திற்குப் பிறகு ஆணவக் கொலைக்காக பிரித்தானிய தம்பதியர் சிறையில் அடைப்பு

  • April 13, 2023
  • 0 Comments

ஒரு பிரித்தானிய தம்பதியினர் புதன்கிழமை ஆணவக் கொலைக்காக சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் நோய்வாய்ப்பட்டிருந்த 16 வயது மகள், கோவிட் கட்டுப்பாடுகளின் போது மிகவும் மோசமான உடல் பருமனால் பாதிக்கப்பட்டு வீட்டில் இறந்தார். Kaylea Titford அக்டோபர் 2020 இல் வேல்ஸில் உள்ள தனது வீட்டில் 321 பவுண்டுகள் (146 கிலோகிராம்) எடையுடன் நாய்க்குட்டிகளுக்காக தயாரிக்கப்பட்ட அழுக்கடைந்த கழிப்பறை திண்டுகளில் படுத்திருந்த நிலையில் இறந்து கிடந்தார். மார்ச் 2020 இல் வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் பிற பகுதிகள் முதல் […]

ஐரோப்பா செய்தி

ரயில் விபத்து காரணமாக கிரேக்க போக்குவரத்து அமைச்சர் ராஜினாமா

  • April 13, 2023
  • 0 Comments

கிரேக்கத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 36 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் ஏதென்ஸிலிருந்து தெசலோனிகி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று வடக்கு நகரத்திலிருந்து பயணித்த சரக்கு ரயிலுடன் மோதியதில், தாமதமாக மத்திய நகரமான லாரிசாவிற்கு வெளியே விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சில பயணிகள் பெட்டிகள் தீயில் வெடித்துச் சிதறின. ஏதென்ஸிலிருந்து இரவு 7.22 மணிக்கு (19:22 GMT) புறப்பட்ட பயணிகள் ரயிலில் சுமார் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • April 13, 2023
  • 0 Comments

பிரிட்டனில் உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் இரு மடங்காக அதிகரித்துள்ளது, இது 3.7 மில்லியன் குழந்தைகளை பாதித்துள்ளது என்று ஒரு புதிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது தொடர்பில் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சுமார் 22 வீத குடும்பங்கள் நேரடியாக உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவித்ததாக கூறியுள்ளனர். இது ஜனவரி 2022 இல் கிட்டத்தட்ட 12 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு, குறிப்பாக குறைந்த […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவுடனான எல்லைப்பகுதியில் வேலி அமைக்கும் பின்லாந்து!

  • April 13, 2023
  • 0 Comments

ரஷ்யாவுடனான தனது எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கையை பின்லாந்து ஆரம்பித்துள்ளது. பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக சுமார் 200 கிலோமீற்றர் நீளமான வேலி அமைக்கப்படவுள்ளதாக பின்லாந்து தெரிவித்துள்ளது. 3 மீற்றர் (10 அடி) உயரமுடையதாக இந்த வேலி இருக்கும். வேலியின் மேற்பகுதியில் முட்கம்பிகள் பொருத்தப்படும் என பின்லாந்து எல்லைக் காவல் படை தெரிவித்துள்ளது. ரஷ்யாவுடன் 1,340 கிலோமீற்றர் நீளமான எல்லையை பின்லாந்து பகிர்ந்துகொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில், ரஷ்யாவுடன் மிக நீளமான எல்லையைக் கொண்டுள்ள நாடு பின்லாந்து. […]

ஐரோப்பா செய்தி

நேட்டோவில் இணைவதற்கு பின்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்!

  • April 13, 2023
  • 0 Comments

நேட்டோவில் இணைவதற்கான பின்லாந்தின் முயற்சிக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 200 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 184 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். உக்ரைன் படையெடுப்பை தொடர்ந்து எல்லைகளை பாதுகாத்துக் கொள்ள பின்லாந்து கடந்த ஆண்டு மே மாதம் விண்ணபித்தது. ஹங்கேரிய ஜனாதிபதி கட்டலின் நோவக், பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் நேட்டோ உள்ளீடுகளை கூடிய விரைவில் அங்கீகரிக்க நேட்டோவிற்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் ஹங்கேரி மற்றும் துருக்கியால் பின்லாந்தின் முயற்சி பின்னடைவை சந்தித்தது. நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் […]

ஐரோப்பா செய்தி

ஜேர்மனியின் விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம்

  • April 13, 2023
  • 0 Comments

ஜேர்மனியில் விசா வழங்கும் நடைமுறையை மாத்திரமன்றி, ஒட்டுமொத்த சட்டத்தையும் புதுப்பிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ஜேர்மனி சான்ஸலர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் மிகப்பாரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நாடாகத் திகழும் ஜேர்மனி விசா வழங்கும் செயன்முறையை விரைவுபடுத்த விரும்புகின்றது. அதுமாத்திரமன்றி வெளிநாட்டுத்தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கும் தீர்மானித்துள்ளது. ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோர் முகங்கொடுக்கும் முக்கிய தடைகளை நீக்கவேண்டும் என்பதே இப்புதிய சட்டத்தின் நோக்கமாகும். இதில் கல்விசார் அடைவுகளை அங்கீகரிப்பது குறித்த சிக்கலான செயன்முறையும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஐரோப்பா செய்தி

ஜி20 கூட்டத்தில் ரஷ்யா மற்றும் சீனாவை புறக்கணிக்கும் பிரதிநிதிகள்!

  • April 13, 2023
  • 0 Comments

இந்தியாவின் ஜி20 கூட்டத்தில் ரஷ்யா மற்றும் சீனாவை தவிர்க்க பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர். ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் அன்னாலெனா பேர்பாக், ஜி20 கூட்டத்தில் ரஷ்ய பிரச்சாரத்தை எதிர்கொள்வுள்ளதாக கூறப்படுகிறது. ஜி20 கூட்டத்தொடர் நாளை இந்தியாவின் புதுடெல்லியில் ஆரம்பமாகவுள்ளது. இதில் உக்ரைன் போர் குறித்து முக்கியமாக கரிசனை கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே இந்த சந்திப்பின் போது சீனா மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகளை சந்திக்க வாய்ப்பில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார். இதனையடுத்து மேற்படி கருத்து வெளியாகியுள்ளது.

ஐரோப்பா செய்தி

கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் – வைரல் புகைப்படம்

  • April 13, 2023
  • 0 Comments

கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் மனித முகம் போன்று தோன்றிய நிலையில் அதை ஒரு புகைப்பட கலைஞர் தனது கேமராவில் புகைப்படமாக எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இயன் ஸ்பரொட் (41). இவர் கொரோனா ஊரங்கு காலத்தில் ஏற்பட்ட மன அழுத்ததில் இருந்து வெளிவர புகைப்பட கலைஞராக மாறினார். பல்வேறு இடங்களுக்கு சென்று இயற்கை நிகழ்வுகளை புகப்படங்களாக எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், இயன் ஸ்பரொட் கடந்த […]

ஐரோப்பா செய்தி

இராணுவ பயிற்சியாளர் போல் வேடமிட்டு உக்ரைனில் நுழைந்த ரஷ்ய உளவாளி கைது!

  • April 13, 2023
  • 0 Comments

உக்ரைனின் இராணுவ பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உக்ரைனின் இராணுவ பயிற்சியாளராக வேடமிட்டு வந்த ரஷ்யாவை சேர்ந்த  உளவாளியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தெற்கு உக்ரைனில் உள்ள மைக்கோலாய்வில், உளவு தகவல்களை சேகரித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில். அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. உக்ரைனின் பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்துவது, ஏவுகணை தாக்குதல்களை குறிவைக்கும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கொண்ட தளங்களின் இருப்பிடங்கள் பற்றிய உளவு தகவல்களை அவர் ரஷ்யாவிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. உளவாளியின் […]