இலங்கை

மொட்டின் தவிசாளர் பதவியில் இருந்து ஜி.எல்.பீரிஸ் நீக்கம்

  • April 10, 2023
  • 0 Comments

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸை நீக்குவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அவரை கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

ஜனாதிபதியால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் – அமைச்சர் பந்துல!

  • April 10, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் பொருளாதார காரணிகளுக்கு தற்போது முன்னுரிமை வழங்கியுள்ளோம் என போக்குவரத்து துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஹோமாகம பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாடு என்றுமில்லாத வகையில் பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. நாடு வங்குரோத்து […]

இலங்கை

எரிவாயு விலை தொடர்பில் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ள லி

  • April 10, 2023
  • 0 Comments

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை இம்மாதம் அதிகரிக்கப்படவிருந்த நிலையில் , டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் நாளை(05) அறிவிப்பார் என கூறப்படுகின்றது. அதேசமயம் எரிவாயு விலை அதிகரித்தாலும், குறைந்தாலும் பெரிய தொகையாக இருக்காது எனவும் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை

உயர்கல்வி அமைச்சராக பதவியேற்கும் எஸ்.பி.திசாநாயக்க!

  • April 10, 2023
  • 0 Comments

எஸ்.பி. திசாநாயக்கவை உயர்கல்வி அமைச்சராக பதவியேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் உயர்கல்வி அமைச்சுப் பதவியுடன் கல்வி அமைச்சுப் பதவியும் ஒன்றாக இருப்பது விரும்பத்தக்கது என எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் முழு அமைச்சரவை மாற்றத்தை செய்வார் எனவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

இலங்கை

கொழும்பில் உள்ள சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

  • April 10, 2023
  • 0 Comments

இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை மூடப்படும் வீதியொன்று தொடர்பில் பொலிஸார் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொலன்னாவை சந்திக்கு செல்லும் வீதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதன்படி, குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய, கொழும்பிற்கு செல்லும் வாகனங்கள் அவிசாவளை வீதியின் கொடிகாவத்தை சந்தியில் இடது பக்கமாக திரும்பி கொதடுவை நகரில் […]

இலங்கை

இலங்கையில் தயாரிக்கப்படும் வேகா காருக்கு உரிமம் கிடைத்துள்ளது

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையால் தயாரிக்கப்பட்ட காருக்கு உரிமம் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வேகா காருக்கு மோட்டார் போக்குவரத்து துறை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் வேகா காருக்கான பதிவு இலக்கத் தகடு  வழங்கப்பட்டது. அங்கு மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் வேகா காரை வடிவமைத்த  ஹர்ஷ சுபசிங்கவிடம் குறித்த இலக்க தகடு கையளிக்கப்பட்டது.

இலங்கை

வவுனியா மகனின் மரணச் செய்தி கேட்டு உயிரிழந்த தாய்

  • April 10, 2023
  • 0 Comments

வவுனியாவில் மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா நெடுங்கேணி பகுதியில் நேற்று முன்தினம் மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்று உயிரிழந்துள்ளார். இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் நேற்று உயிரிழந்துள்ளார். குறித்த மரண செய்தியை இன்று அறிந்த குறித்த குடும்பத்தரின் தாயாரான இராசரட்ணம் வீரம்மா என்ற 82 வயதுடைய முதியவரும் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் […]

இலங்கை

இலங்கையில் வீதியில் பயணித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • April 10, 2023
  • 0 Comments

வீதியில் பயணித்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையை அபகரித்த நிலையில் தலத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி மற்றும் முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாம்களில் கடமையாற்றும் இராணுவத்தினர் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று, இவ்வாறு அபகரித்து சென்றுள்ளனர். இவர்களில் ஒருவர் முல்லைத்தீவு பகுதியிலுள்ள இராணுவ முகாமிலும் மற்றையவர் கண்டி இராணுவ முகாமிலும் பணிபுரிவதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தலத்துஓயா  பகுதியைச் சேர்ந்த பெண் வீதியில் பயணித்துக் […]

இலங்கை

உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் வெளியான தகவல்

  • April 10, 2023
  • 0 Comments

உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்கான திகதி எதிர்வரும் 9ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது. அரச அச்சகத் திணைக்களம், நிதி அமைச்சு, பொலிஸ் திணைக்களம் உட்பட தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னர், திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கூறினார். உள்ளாட்சிமன்ற தேர்தலுக்கான திகதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், 9 ஆம் திகதிக்கு முன்னர்  குறித்த அறிவிப்பு வெளியாகும் என தேர்தல் ஆணைக்குழு அறிக்கைமூலம் அறிவித்துள்ளது.

இலங்கை

மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய் பூசிய கணவன் – இலங்கையில் நடந்த கொடூ

  • April 10, 2023
  • 0 Comments

மனைவியை, நிர்வாணமாக்கி கை கால்களைக் கட்டி, மிளகாயை நசுக்கி, அந்தரங்கப் பகுதிக்குள் புகுத்திய கணவனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர். பாதுக்க அங்கம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கணவர் தனது கை, கால்களைக் கட்டி, மிளகாயை நசுக்கி அந்தரங்கப் பகுதியில்  செலுத்தியதாகவும், புழுக்களை எடுத்து உடலில் செருகுவார் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில், தனது […]