பண்டாரவளையில் மண் சரிவு – பலரை காணவில்லை
பண்டாரவளை, புனகல வட்டே, கபரகல பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்ததில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. உயிரிழந்தவர்களில் 6 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன இருவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அனர்த்தத்தில் சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.