வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டிற்கு எதிராக மூதூரில் போராட்டம்!
திருகோணமலை ,மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் வைத்தியசாலைக்கு முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார கட்டண அதிகரிப்பை இல்லாமல் செய், வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்,சம்பள அதிகரிப்பை வழங்கு, அதிகரித்த வட்டி வீதத்தை இல்லாமல் செய், புதிய வரிக் கொள்கையை உடன் நிறுத்து ,மேலதிகநேர கொடுப்பணவை வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பு […]