இலங்கை

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பம்!

  • April 10, 2023
  • 0 Comments

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபரி தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை 5 மணி முதல் அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை பக்தர்களை கொண்டு செல்லும் சேவையில் ஈடுபட்டுள்ளன. கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவானில் இருந்து காலை 6 மணி இடம்பெறுகிறது. படகு சேவையில், குறிக்கட்டுவானில் இருந்து பயணிக்கும், நபர் ஒருவருக்கு, இரு வழிப் […]

இலங்கை

யாசகரின் குழந்தை மீட்பு : கரு கலைந்ததால் குழந்தை ஆசையில் பெண் செய்த செயல்!

  • April 10, 2023
  • 0 Comments

பெண் யாசகர் ஒருவரின் ஒன்றரை மாத ஆண் குழந்தையை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் பெண்ணொருவர் வனாத்துவில்லு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பம்பலப்பிட்டிய பொலிஸார், கைக்குழந்தை தங்களுடைய பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தனர்.குழந்தையை கடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஓட்டோவின் சாரதி, தரகர்களாக செயற்பாட்ட நான்கு ஆண்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரின் கணவன் வெளிநாட்டில் ​பணியாற்றுகின்றார். அந்தப் பெண் பிரசவத்துக்காக கொழும் பிரதேசத்தில் உறவினர் வீட்டில் […]

இலங்கை

தட்டுப்பாடாகவுள்ள 37 வகையான மருந்துகளை விரைவில் பெற்றுக்கொடுக்க WHO இணக்கம்!

  • April 10, 2023
  • 0 Comments

நாட்டில் தட்டுப்பாடாகவுள்ள 37 வகையான மருந்துகளை விரைவில் பெற்றுக்கொடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டை முன்னிட்டு ஜெனிவாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உடனான கலந்துரையாடலின் போது இலங்கையின் தற்போதைய சுகாதார நிலைமை குறித்து தெளிவுபடுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டிற்கு எதிராக மூதூரில் போராட்டம்!

  • April 10, 2023
  • 0 Comments

திருகோணமலை ,மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் வைத்தியசாலைக்கு முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார கட்டண அதிகரிப்பை இல்லாமல் செய், வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்,சம்பள அதிகரிப்பை வழங்கு, அதிகரித்த வட்டி வீதத்தை இல்லாமல் செய், புதிய வரிக் கொள்கையை உடன் நிறுத்து ,மேலதிகநேர கொடுப்பணவை வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பு […]

இலங்கை

இராணுவத்தினர் கடமைக்கு இடையூறு : யாழில் இருவர் கைது!

  • April 10, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர வண்டியில் வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த வேளை, மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், இராணுவத்தினரை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி , இராணுவத்தினரை தகாத வார்த்தைகளால் பேசி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர். அது தொடர்பில் இராணுவத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் […]

இலங்கை

தேர்தலை நடத்தாவிட்டால் போராட்டத்தில் குதிப்போம்; சாணக்கியன் அதிரடி !

  • April 10, 2023
  • 0 Comments

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்யாவிட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்; “ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் கூறிக் கொள்வது ஒன்று தான், உடனடியாக தேர்தலை நடாத்துங்கள்.பொய்யான சாக்குப்போக்கு காரணங்களை காட்டி எம்மை ஏமாற்ற நினைக்காதீர்கள். தேர்தலை நடத்தாவிட்டால் வடக்கு, கிழக்கின் பலத்தைக் காட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் […]

இலங்கை

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!

  • April 10, 2023
  • 0 Comments

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை மாலை மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கைது, நாட்டில் விலைவாசியேற்றம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதன்போது அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு கோசங்கள் […]

இலங்கை

கனடா வேலை வாய்ப்பு; விசா மோசடியில் சிக்கிய பிரதேச சபை உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது!

  • April 10, 2023
  • 0 Comments

கனடாவில் வேலைவாய்ப்பு மற்றும் வதிவிட விசாக்களை பெற்று தருவதாக உறுதியளித்து நபர்களிடமிருந்து 5 – 20 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர் ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் சந்தேக நபருக்கு பணம் செலுத்திய 25 பேரிடம் முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபருக்கு […]

இலங்கை

ஆட்சி மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • April 10, 2023
  • 0 Comments

பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை, வான்படை முகாமில் கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட வான்படை அதிகாரிகள் வெளியேறும் அணிவகுப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை

இலங்கையின் வரிக்கொள்கை தொடர்பில் வெளியான தகவல்

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கையை மறுசீரமைப்பது இன்றியமையாத விடயம் என சர்வதேச நாணய நிதியத்தின் இந்நாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. வரி வருவாய் மற்றும் செலவு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை சரி செய்யவே அது தேவைப்படுவதாக அலுவலகம் தெரிவித்துள்ளது. தனிநபர் வருமான வரிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வரி விகிதம் அதை அடைவதற்கு இன்றியமையாதது என்று சர்வதேச நாணய நிதியத்தின் இந்நாட்டு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள் ஊடாக கடனாளிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.