சிகிச்சைக்கு பணம் இல்லாததால் பிள்ளைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு – இலங்கையில் நடந்த சோகம்
கெபிதிகொல்லாவ, கனுகஹவெவ பிரதேசத்தில் உள்ள தாயொருவர், தனது இரு அங்கவீனமான மகன்களுடன் இன்று (05) தற்கொலை செய்யும் நோக்கில் கிணற்றில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தாயுடன் மற்றையவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் கபிதிகொல்லேவ கனுகஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் சாந்தகே ரவிது மிஹிரங்க என்ற இருபத்தொரு வயதுடைய இளைஞர் ஆவார். உயிரிழந்த இளைஞனின் 48 வயதுடைய தாயும் ஒன்பது […]