IMF ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்படும்
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வீதி வரைபடம் என்பவற்றுடன் அந்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உறுதியளித்தார் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு பாராளுமன்ற உரையின் போது எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி , நாட்டு நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் எனவும் பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்