இலங்கையில் நகைக்கடையொன்றில் அதிர்ச்சி கொடுத்த பெண்
பொல்பித்திகம பகுதியிலுள்ள தங்க நகைக்கடையொன்றில் 61 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்கள் அணியும் கடிகாரம் மற்றும் தங்க மோதிரம் என்பவற்றை வாங்கிக் கொண்டு உண்மையான ரூபா நோட்டுகளுடன் ஏழு போலி ஆயிரம் ரூபா நோட்டுகளையும் சேர்த்து வழங்கியதாக கூறப்படும் பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இப் பெண்ணிடமிருந்து 30 ஆயிரம் ரூபா போலி நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தும் இப்பெண் மிஹிரன்பிட்டிகம பிரதேசத்தைச் […]