இலங்கை செய்தி

இலங்கை பொலிஸார் பயன்படுத்தும் கண்ணீர்ப்புகை குண்டுகளால் ஆபத்து

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை பொலிஸ் சேவைக்கு கண்ணீர்ப்புகை குண்டுகளைக் கொள்வனவு செய்தபோது, விதி மீறல்கள் இடம்பெறவுள்ளது. அவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் இரசாயன ஆய்வுக்கூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்காமை தெரியவந்துள்ளது. கண்ணீர்ப்புகை குண்டுகள் தொடர்பில் சமூகம் மற்றும் அமைதிக்கான மையத்தின் குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வௌியாகியுள்ளது. இந்த ஆய்விற்கமைய, 2022 ஆம் ஆண்டில் ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 2000 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட கண்ணீர்ப்புகை குண்டுகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 முதல் 2019 […]

இலங்கை செய்தி

வவுனியாவில் பிரபல வைத்தியரின் மகனின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்

  • April 11, 2023
  • 0 Comments

வவுனியாவில் பிரபல வைத்தியர் ஒருவரின் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் மாலை நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 26 வயதான இளைஞர் என்றும் அவர் 2016ஆம் ஆண்டு உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3ஏ எடுத்து, மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்று, மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மைக்காலமாக வவுனியாவில் தொடர்ச்சியாக தற்கொலை மரணங்கள் அதிகரித்து வருகின்றமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

இலங்கை செய்தி

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றில் தூசு துகள்களின் செறிவு தரச்சுட்டியில் 124 அலகுகளாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் சஞ்சய ரத்நாயக்க இதனை தெரிவித்தார். இந்தியாவில் இருந்து நாட்டை நோக்கி வீசும் காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றமே இந்த நிலைமைக்கு காரணம் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புகளுக்கமைய, தூசு துகள்களின் […]

இலங்கை செய்தி

இலங்கையில் கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 2021 டிசம்பரில், 19,027,195 அட்டைகள் செயல்பாட்டில் இருந்ததாகவும், 2022 டிசம்பரில் 19,052,991 ஆக இருந்ததாகவும் மத்திய வங்கி அறிக்கைகள் காட்டுகின்றன. அவற்றில், 13,445 உள்ளூர்கடன் அட்டைகள் மற்றும் 19,040,720 உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் அட்டைகள் உள்ளன. மேலும் 2021 ஆம் ஆண்டில் நிலுவைத் தொகை 133,285 ஆக இருந்தது, இது 2022 ஆம் ஆண்டில் 143,098 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கி அறிக்கைகள் […]

இலங்கை செய்தி

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொலவத்த, ஷெஹானின கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

  • April 11, 2023
  • 0 Comments

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைப் புறந்தள்ளும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேம்நாத் தொலவத்த மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்தை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது. உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை மேற்கோள்காண்பித்து பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேம்நாத் தொலவத்த மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரால் வெளியிடப்பட்ட கருத்துக்களைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம். நீதிமன்றத்தின் இடைக்காலத்தடையுத்தரவு தமக்குரிய (பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய) பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாக கடந்த 7 ஆம் திகதி பிரேம்நாத் தொலவத்த தெரிவித்துள்ளார். அதேபோன்று பிரேம்நாத் தொலவத்தவின் […]

இலங்கை செய்தி

நியாயமற்ற உயர் வரியறவீட்டு வீதம் வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும்

  • April 11, 2023
  • 0 Comments

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் வேளையில், ஒரே தடவையில் வரிவருமானத்தை 200 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு முற்படுவது பொருத்தமற்றதாகும். வரியறவீட்டு வீதம் நியாயமற்றவகையில் மிகவும் உயர்வாகக் காணப்படும்போது வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது பல்வேறு வழிகளிலும் நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்று துறைசார் நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகள் எச்சரித்துள்ளனர். இலங்கைக்கு ஏற்றவாறான நியாயமானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புடன்கூடியதுமான வரியறவீட்டு முறைமை தொடர்பான 32 பக்கங்களைக்கொண்ட முன்மொழிவொன்று தொழில்சார் நிபுணர்களின் தொழிற்சங்கக்கூட்டணியினால் வெளியிடப்பட்டுள்ளது. பேராசிரியர் […]

இலங்கை செய்தி

கொழும்பு, களனி பல்கலைக்கழகங்களுக்குள் பாதுகாப்புத்தரப்பினர் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் அவசியம்

  • April 11, 2023
  • 0 Comments

அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள்மீது நடாத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிப்பதாகவும், கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழக வளாகத்துக்குள்  பொலிஸாரும் இராணுவத்தினரும் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உயர்கல்வி பயிலும் 1000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இலங்கையின் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர்களின் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்துக்கு எதிரான ஒடுக்கு முறைகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி சேஞ்ச் அமைப்பின் ஊடாக வரதாஸ் தியாகராஜாவினால் இணையவழியில் […]

இலங்கை செய்தி

வர்த்தகர்கள், பல்துறைசார்ந்த கடன் பெறுநர்களுக்குப் புதிய சலுகைகள்

  • April 11, 2023
  • 0 Comments

பல்துறைசார்ந்த வர்த்தகர்கள் மற்றும் தனியார்துறையினர் ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் முடிவடைந்திருக்கும் நிலையில், அவர்களின் கடன்மீள் செலுத்துகை செயன்முறையை இலகுபடுத்தும் நோக்கில் மேலதிக சலுகைகளை வழங்குமாறு நிதியியல் கட்டமைப்புக்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தாம் ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதில் வர்த்தகர்கள் மற்றும் பல்துறைசார்ந்தோர் பலதரப்பட்ட சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், புதிதாக வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தொடர்பில் மத்திய வங்கி மேலும் கூறியிருப்பதாவது: கொவிட் – 19 வைரஸ் […]

இலங்கை செய்தி

இந்து ஆலயங்களை மீள் நிர்மாணிக்க அனுமதி வழங்க வேண்டும் – ஆறுதிருமுருகன் கோரிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

அழிக்கப்பட்ட ஆலயங்களை மீளக்கட்டுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் ஏனைய ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் புத்தர் சிலைகள் நிர்மாணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை சைவமக்களின் மிகத்தொன்மை வாய்ந்த வரலாற்றிடம் கிரிமலை இப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமான […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு உதவும் வாய்ப்பை ஜி-20 நாடுகள் தவறவிட்டுள்ளன சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி

  • April 11, 2023
  • 0 Comments

அண்மையில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில், கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் உலகளாவிய ஆய்வாளரும் கொள்கை ஆலோசகருமான சன்ஹிதா அம்பாஸ்ற் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி இலங்கையின் 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு இலங்கையை இக்கடன்நெருக்கடியிலிருந்து விடுவிப்பது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் சவால்கள் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது. […]